அக்.6 அரசு கேபிள் டிவி நிறுவனம் முற்றுகை! ஆபரேட்டர்கள் சங்கத் தலைவர் சுப.வெள்ளைச்சாமி அறிவிப்பு
சென்னை, செப்.30 - கேபிள் டிவி ஆபரேட்டர் களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.6ந் தேதி அரசு கேபிள் டிவி நிறு வனத்தை முற்றுகையிடு வோம் என்று ஆபரேட்டர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப.வெள்ளைச்சாமி செவ்வா யன்று (செப்.30) சென்னை யில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு கேபிள் டிவி நிறுவனத்தோடு, மந்திரா என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்து செட்டாப் பாக்ஸ்களை வழங்குகிறது. ஒவ்வொரு செட்டாப் பாக்ஸ்களுக்கும் அரசு கேபிள் டிவி நிறுவனம் 30 ரூபாய் வாடகை செலுத்துகிறது. இந்த நிலையில் கேபிள் டிவி ஆபரேட்டர்களையும் செட்டாப் பாக்ஸ்களை வாங்க வேண்டும், நல்ல நிலையில் உள்ள செட்டாப் பாக்ஸ்களை அகற்றிவிட்டு மந்திரா நிறுவனம் கொடுக்கும் புதிய பாக்ஸ்களை பயன்படுத்த வேண்டும் என்று மந்திரா நிறுவனம் நிர்பந்திக்கிறது. செட்டாப் பாக்ஸ்களை வாங்க மறுக்கும் ஆபரேட்டர்களை வட்டாட்சி யர்களை வைத்து மிரட்டு கிறது. ஏற்கெனவே ஆப ரேட்டர் உள்ள பகுதியில் புதியவர்களுக்கு உரிமம் கொடுத்து தொழில் நெருக்கடி, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்து கிறது. இத்தகைய அச்சு றுத்தலுக்கு பயந்து வங்கி யில் கடன் கேட்டு ஒரு சில ஆபரேட்டர்கள் விண்ணப் பித்துள்ளனர். கடன் தொகை ஆப ரேட்டர்களின் கணக்கிற்கு பணம் வருவதற்கு முன்பே, அரசு கேபிள் டிவி வேலட்டில் வரவு வைக்கப் படுகிறது. வேலட்டில் வரவு வைக்கப்படும் தொகை யாருடையது? யாருக்கு திருப்பி செலுத்த வேண்டுமென்று புரியாமல் ஆபரேட்டர்கள் குழப்பமடைந்துள்ளனர். இந்த நிறுவனத்துடன் இணைந்து கம்பிவட தொழிலாளர் மற்றும் ஆப ரேட்டர்கள் நல வாரிய தலைவர் ஜீவாவும் ஆப ரேட்டர்களுக்கு பல்வேறு இடையூறுகளை செய்கி றார். இவற்றின் காரணமாக அரசு கேபிள் டிவி-க்கு மாதம் ரூ.8 கோடி நட்டம் ஏற்படுகிறது. அரசு கேபிள் டிவிக்கு, ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தற்காலிக உரிமம் வழங்கி யுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், புதிய இணைப்புகளை வழங்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இறுதி தீர்ப்பை அக்.13ந் தேதி வழங்க உள்ளது. இதனால் ஆபரேட்டர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், ஆபரேட்டர்கள் பிரச்சனை குறித்து முதலமைச்சரிடம் முறையிட அனுமதி கோரி 4 மாதமாக காத்திருக்கிறோம். முதல மைச்சர் அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்று காத்திருக்கிறோம். முதல மைச்சர் சந்திக்க மறுக்கும் நிலையில் அக்.6ந் தேதி சென்னை ராஜரத்தினம் மைதானத்திலிருந்து ஊர்வலமாக சென்று அரசு கேபிள் டிவி தலைமை அலுவலகத்தை முற்று கையிட உள்ளோம். இவ்வாறு அவர் கூறி னார். இந்நிகழ்வின்போது செயலாளர் எஸ்.ராதா கிருஷ்ணன், பொருளாளர் ஆர்.கோவர்த்தணன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.