tamilnadu

“ஒரேயொரு கடிதம் கொடுங்கள்..” இரண்டாவது நாளாக போராடும் விவசாயிகள்

“ஒரேயொரு கடிதம் கொடுங்கள்..” இரண்டாவது நாளாக போராடும் விவசாயிகள்

திருப்பூர், அக். 4 - வெறிநாய்களால் கடித்துக் கொல் லப்பட்ட ஆடுகளுக்கு இழப்பீடு வழங் கப்படும் என வருவாய்த்துறை சார்பில்  ஒரேயொரு கடிதம் கொடுத்தால் போதும் என்று வலியுறுத்தி இரண்டா வது நாளாக விவசாயிகள் போராடி வரு கின்றனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் பரஞ்சேர்வழி கிராமத்தில் கடந்த  வியாழக்கிழமை இரவு வெறிநாய்கள் கடித்து பட்டியில் அடைத்து வைக்கப் பட்டிருந்த 15க்கும் மேற்பட்ட ஆடுகள்  காயமடைந்தன. 10 ஆடுகள் பலியாகின.  இதையடுத்து இறந்த ஆடுகளை மாவட்ட ஆட்சியரகத்துக்கு கொண்டு  வந்து இழப்பீடு கேட்கப் போவதாக விவ சாயிகள் புறப்படத் தயாரானார்கள். சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்  துறையினர் அவர்களிடம் பேச்சு நடத்தி னர். எனினும் எந்த உடன்பாடும் எட்டப்ப டாத நிலையில் விவசாயிகள் அங் கேயே போராட்டம் நடத்தினர். வெள்ளி யன்று மாலை கொட்டும் மழையிலும் விவசாயிகள் போராட்டம் தொடர்ந் தது. இது குறித்து விவசாயிகள் சார்பில்  காங்கேயம் பிஏபி சங்க விவசாயி வேலுச்சாமி கூறுகையில், உயிரிழந்த ஆடுகளுக்கு ஒரேயொரு முறை அர சாணை மூலம் இழப்பீடு வழங்கப்பட் டது. அதன் பிறகு மற்ற உயிரிழந்த ஆடு களுக்குரிய இழப்பீடு கிடைக்க வில்லை. தற்போது 10 ஆடுகள் பலியாகி  உள்ளன. ஒவ்வொரு ஆடும் குறைந்த பட்சம் ரூ.40 ஆயிரம் வரை விற்பனையா கக்கூடியதாகும். பெரும் இழப்பைச் சந்தித்திருக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடாக ஏற்கெனவே கொடுத்த தலா  ரூ.6 ஆயிரம் என்பதையாவது கொடுக்க  வேண்டும். இது குறித்து காங்கேயம்  வட்டாட்சியர் கடந்த காலங்களில் கொடுத்ததைப் போல எழுத்துப்பூர்வ மாக இழப்பீடு தருவதாக உறுதி யளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இழப்பீடு குறித்து ஒரேயொரு கடி தம் கொடுத்தால் போதும். இல்லாவிட் டால் நாங்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று அவர் தெரி வித்தார். இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தது.