திறப்பு விழாவிற்கு தயாரானது ஜி.டி.நாயுடு மேம்பாலம்...! அக்.9 (நாளை) திறக்கிறார் தமிழக முதல்வர்
தொழில் நகரமான கோவை நக ரில் மக்கள் தொகையும், வாகனங் களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகன எண்ணிக்கை அதிகரிப்பால் போக்குவரத்து நெரி சலும் அதிகரித்துள்ளது. போக்கு வரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் திருச்சி சாலை, பொள்ளாச்சி, பாலக்காடு சாலை, மேட்டுப்பாளையம் சாலை களில் புதிய மேம்பாலங்கள், சாலை விரிவாக்கப் பணிகள் மேற் கொள்ளப்பட்டது. இதனிடையே கோவை மாநகரின் முக்கிய சாலை யான அவினாசி சாலையில் ஏராள மான பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், ஐடி நிறு வனங்கள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், விமான நிலையம் உள்ளது. மேலும் திருப்பூர், ஈரோடு, சேலம், சென்னை செல்லும் பிர தான சாலை என்பதால் தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் போக்குவரத்து நெரி சலை குறைக்கும் வகையில் அவி நாசி சாலையில் உப்பிலிபாளை யம் - கோல்டுவின்ஸ் வரை சுமார் 10.1 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேம்பாலம் கட்ட முடிவு செய்யப் பட்டது. இந்நிலையில் கடந்த 2020 இல் மேம்பால கட்டுமானப் பணிகள் துவங்கியது. பணிகள் தொடங்கிய நிலையில் கூடுதலாக போக்கு வரத்து நெரிசலில் அவிநாசி சாலை சிக்கி தவித்தது. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக மேம்பால கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. 10.1 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.1,791 கோடி மதிப்பீட்டில் 301 தூண்கள், 610 சாலை விளக்குகள், அண்ணா சிலை, நவ இந்தியா, விமான நிலை யம், ஹோப் காலேஜ் ஆகிய 4 இடங்களில் இறங்கி, ஏறு தளங்கள் என பிரமாண்டமாக அமைக்கப்பட் டுள்ள மேம்பாலப் பணிகள் நிறைவ டைந்து திறப்பு விழாவிற்கு தயா ராகி விட்டது. இதன் மூலம் பல ஆண்டுகளாக அவினாசி சாலையில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலுக்கு முடிவு எட்டியுள்ளது. வரும் அக்.9 வியாழக்கிழமை தமிழ்நாடு முதல் வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைக்க உள் ளார். இதனிடையே கோவை அவி நாசி சாலை மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார். கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த ‘அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை நாளை மறுநாள் மக்களின் பயன் பாட்டுக்குத் திறந்து வைக்க இருக் கிறேன். கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள் கைத் தோழர் ஜி.டி.நாயுடு அவர்க ளின் பெயரை இந்த மேம்பாலத் துக்குச் சூட்டி மகிழ்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளர். போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள் மத்தியில் புதிய பாலம் திறப்பு என்பது நிம்மதி பெருமூச்சை விட வைத்துள்ளது. -கவி
