திமுக தருமபுரி முன்னாள் எம்எல்ஏ மறைவு
தருமபுரி, ஆக.29- தருமபுரி சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் ஆர்.சின்ன சாமி வியாழனன்று காலமானார். தருமபுரி மாவட்டம், குமார சாமிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வர் ஆர்.சின்னசாமி (89). இவர் கிருஷ்ணகிரியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தருமபுரி மாவட் டத்தில் 1970 ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகள் திமுக மாவட்டச் செயலாளராக பணியாற்றி னார். 1971, 1984, 1989 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தல்களில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு 3 முறை தேர்வு செய்யப்பட்டார். திமுக மாநில சட்ட திருத்தக் குழு உறுப்பினராகவும் செயல்பட்ட இவர், வயது மூப்பு காரணமாக வியாழனன்று காலமானார். குமாரசாமிப் பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, மாவட்டச் செயலாளர் தடங்கம் பெ. சுப்பிரமணி உட்பட கட்சி பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இவரது மறைவிற்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.