tamilnadu

img

குட்டை நீரில் பதுங்கிருந்த முதலை லாவகமாக பிடித்த வனத்துறையினர்

குட்டை நீரில் பதுங்கிருந்த முதலை லாவகமாக பிடித்த வனத்துறையினர்

மேட்டுப்பாளையம், ஜூலை 9 – குட்டை நீரில் பதுங்கியிருந்து கிராம மக்களை அச்சு றுத்தி வந்த 7 அடி நீள முதலையை, ஐந்து மணி நேரம் போராடி வனத்துறையினர் லாவகமாக பிடித்து பவானி நீர்த்தேக்க பகுதியில் விடுவித்தனர். கோவை, மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பெள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பட்டக்கார னூர் என்னும் கிராமத்தில் சுமார் எட்டு அடி ஆழமுள்ள  குட்டை ஒன்று உள்ளது. கிராமத்தின் நடுவே அமைந் துள்ள இக்குட்டையில் அவ்வப்போது பெரிய முதலை யின் நடமாட்டத்தை கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த னர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத் துறையினர் புதனன்று காலை முதல் குட்டையில் தேங்கி யிருந்த தண்ணீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றி முதலையை தேடி வந்தனர். குட்டையில் தண்ணீர் குறைந்த போதிலும் முதலை கண்ணில் தென்படாத நிலையில், குட்டையில் இருந்த பாறையின் இடுக்கில் மறைந்திருப்பதை கண்டனர். இதனால் பாறைகளுக்கு நடுவே பதுங்கியிருந்த முத லையை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் பின்னர்  மூங்கில் குச்சியில் கயிற்றைக் கட்டி பாறையின் இடுக்கில் மறைந்திருந்த முதலையை சுமார் 5 மணி நேர போராட் டத்திற்கு பின்னர் பத்திரமாக பிடித்தனர். பின்னர், பிடிக் கப்பட்ட முதலையை பவானிசாகர் அணைபகுதியில் ஆழம் அதிகமுள்ள பகுதியில் விடுவித்தனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.