tamilnadu

img

முகூர்த்த சீசன் முடிந்ததால் பூக்கள் விலை கடும் சரிவு

முகூர்த்த சீசன் முடிந்ததால் பூக்கள் விலை கடும் சரிவு

ஈரோடு, செப்.7- விநாயகர் சதூர்த்தி, ஓணம் மற்றும் முகூர்த்த சீசன்கள்  முடிந்ததால், பூக்களின் விலை கடுமையாக சரிந்துள்ளது.  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங் களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பயிரிடப் பட்டுள்ளது. இங்கு விளையும் சம்பங்கி பூக்கள் கோவை,  திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், கேர ளம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக் கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆவணி  மாத வளர்பிறை முகூர்த்த சீசனை முன்னிட்டு சம்பங்கி  பூக்கள் விலை அதிகரித்து விற்பனையானது. அதிகபட்சமாக  இந்த சீசனில் ஒரு கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையான நிலை யில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு 240 ரூபாய்க்கு விற் பனையானது. இந்நிலையில், வளர்பிறை முகூர்த்த சீசன்  முடிந்ததால் படிப்படியாக விலை குறைந்து ஞாயிறன்று சத்தி யமங்கலம் பகுதியில் சம்பங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கு  விற்பனையானது. சம்பங்கி பூ விலை வீழ்ச்சி அடைந்ததால் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதேபோன்று, தருமபுரி மாவட்டத் தில் செவ்வந்தி பூ அதிகமாக விளையும், கடந்த வாரத்தில் செவ்வந்தி பூ கிலோ ரூ.400 வரை விற்பனையாகி வந்த நிலை யில், தற்போது, ரூ.60 க்கு விற்பனையாகிறது. இதே போன்று, மல்லி, முல்லை, ஜாதி மல்லி உள்ளிட்ட பூக்கள்  விலையும் கடுமையாக சரிந்துள்ளது.