tamilnadu

கூலித் தொழிலாளியை மிரட்டும் நிதி நிறுவனத்தினர்

கூலித் தொழிலாளியை மிரட்டும் நிதி நிறுவனத்தினர்

நாமக்கல், ஜூலை 22- கடன் பெற்ற கூலித் தொழிலாளி ஒருவரை நிதி  நிறுவன ஊழியர்கள் கடுமையாக மிரட்டல் விடுக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமார பாளையம் பகுதிகளில் செயல்படும் விசைத்தறிக் கூடங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். விசைத்தறித்  தொழில் நலிவடைந்ததால் பெரும்பாலான தொழிலா ளர்கள், தங்களது குடும்ப தேவைக்காக நிதி நிறுவ னங்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கியுள்ளனர். கடனை திருப்பி செலுத்த முடியாத சூழலுக்கு தள் ளப்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் சிலர், தங்க ளது கிட்னியை இடைத்தரகர்கள் மூலமாக சட்ட விரோதமாக விற்பனை செய்து அந்த பணத்தை  கொண்டு கடனை செலுத்திய சம்பவம் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நி லையில், சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த கூலித்  தொழிலாளியான சிவசங்கரன் என்பவர் நிதி நிறுவ னத்தில் கடன் பெற்று மாதந்தோறும் முறையாக தவணைத் தொகையை செலுத்தி வந்துள்ளார். சூழ் நிலை காரணமாக கடந்த மாதம் தவணையை செலுத்த முடியாத நிலைக்கு சிவசங்கரன் தள்ளப் பட்டுள்ளார். இதனால் அவரது வீட்டிற்கு சென்ற நிதி நிறுவன ஊழியர்கள் கடுமையான சொற்களால் சிவசங்கரனை திட்டியதோடு, தங்களை யாரும் எது வும் செய்ய முடியாது என நிதி நிறுவன ஊழியர்கள் பேசிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தற் போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வீடியோ கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாகவே இணையதளத்தில் பரவியுள்ளது என்பதும், தற்போது அது மீண்டும் வைரலாக பரவி  வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.