காலிப்பணியிடங்களை நிரப்பிடுக அரசு ஊழியர் சங்கப் பேரவை வலியுறுத்தல்
கோவை, அக்.11- ஆறு லட்சத்திற்கு மேலான காலிப்பணியிடங்களை முறையான காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் என அரசு ஊழியர் சங்க கோவை மாவட்டப் பேரவையில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 17 ஆவது மாவட்டப் பேரவை சனியன்று கோவை தாமஸ் கிளப்பில் தோழர் பஞ்சலிங்கம் நினைவரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.ஜெகநாதன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.சையது உசேன் வரவேற்றார். தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன் வாடி ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் கே.பழனிச் சாமி துவக்கவுரையாற்றினார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் பி.செந்தில்குமார், பொருளாளர் அறிக்கையை மாவட்டப் பொருளாளர் பி.நடராஜன் ஆகியோர் முன்வைத்தனர். இதில், சகோதர சங்கங் களின் நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண் டும். ஆறு லட்சத்திற்கு மேலான காலிப்பணியிடங் களை முறையான காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். அரசுத்துறையில் ஒப்பந்தம், அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம் செய்வதை கைவிட வேண் டும். 21 மாத கால ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதிய உயர்வு நிலுவை தொகை வழங்கிட வேண்டும். இளை ஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கின்ற அரசு ஆணையை நிரந்தரமாக ரத்து செய்திட வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் வி. சுரேஷ் சிறப்புறையாற்றி னார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.பரமேஸ்வரி நிறைவுறையாற்றினார். நிறைவாக ஓய்வு பெற்ற நிர்வாகிகளுக்கு சிறப்பு செய் யப்பட்டது. இணைச் செயலாளர் வே.சின்ன மாரிமுத்து நன்றி கூறினார்.
