tamilnadu

img

எட்டு ஆண்டுகளாக பழுதடைந்த சாலை சீரமைக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

எட்டு ஆண்டுகளாக பழுதடைந்த சாலை சீரமைக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

பொள்ளாச்சி, செப். 29- கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தாலூகாவுக் குட்பட்ட கொண்டம்பட்டி முதல் அரசம்பாளையம் வரையிலான கிராம இணைப் புச் சாலையை உடனடியாகப் புதுப்பித்துத் தரக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங் கம் கொண்டம்பட்டி கிளை சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கொண்டம்பட்டி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சுமார் எட்டு ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாமல் உள்ள இந்த சாலையால், இந்தப் பகுதி யில் இயங்கிய மினி பேருந்து சேவை நிறுத்தப் பட்டுவிட்டது. இதனால், விவசாயிகள் தங்கள்  உற்பத்திப் பொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்ல முடியாமல் பெரும் சிர மத்துக்கு ஆளாகி வருகின்றனர். பொது மக்களும் அத்தியாவசியத் தேவைகளுக் காகச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே, பழுதடைந்த சாலையை உடனடி யாக புதுப்பித்து தந்து, பேருந்து சேவையை மீண்டும் தொடங்க தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்குச் சங்கத்தின் கிளைச் செயலாளர் ஆ.முத்து மாணிக்கம் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் அ. சண் முகம் துவக்க உரையாற்றினார். மாவட்டச்  செயலாளர் வி.ஆர்.பழனிசாமி கோரிக்கை களை விளக்கிப் பேசினார். இந்த ஆர்ப் பாட்டத்தில் மாதர் சங்க தாலுகா செயலா ளர் ரேவதி உள்ளிட்ட திரளான விவசாயிக ளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.