tamilnadu

img

தோல் தொழிற்சாலை, சிறைச்சாலை அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்

தோல் தொழிற்சாலை, சிறைச்சாலை அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்

நாமக்கல், ஜூலை 29- லத்துவாடியில் தோல் தொழிற்சாலை மற்றும் சிறைச் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி விவசாயி கள் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், லத்துவாடியில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சுமார் 510 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் 175 ஏக்கரில் தோல் தொழிற்சாலையும், 25 ஏக்கரில் சிறைச்சாலையும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதற்காக நில அளவீடு செய்யும் பணி நிறைவடைந்த தாக கூறப்படுகிறது. இந்நிலையில், தோல் தொழிற்சாலை, சிறைச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து லத்துவாடி கிராம விவசாயிகள் மற்றும் மக்கள் நல கூட்டமைப்பினர், கால்நடை மருத்துவக்கல்லூரி நுழைவாயிலை முற்றுகை யிட்டு திங்களன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து,  மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தியை சந்தித்து மனு அளித்த னர். இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், தோல் தொழிற்சாலை, சிறைச்சாலை அமைக்கப்படுவது குறித்து  ஆட்சியரை சந்தித்து விளக்கம் கேட்டோம். பொதுமக்களி டம் கருத்துகளை கேட்டு தான் இறுதி முடிவுகளை எடுப்போம்  என ஆட்சியர் கூறினார். அரசுக்கு அனுப்பக்கூடிய கருத்து ருக்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். மேலும், கருத்துக்கேட்பு கூட்டத்தில் உள்ளூர் மக்கள் மட் டுமே பங்கேற்க வேண்டும் என தெரிவித்தோம். தோல் தொழிற்சாலை வந்தால் மாணவர்கள், விவசாயிகள் கடுமை யாக பாதிக்கப்படுவார்கள், என்றனர்.

தருமபுரி மாவட்டம், ஏரிமலை பழங்குடியினர் பெயரில் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன் தலை மையில், காவல் கண்காணிப்பாளரிடம் செவ்வாயன்று மனு அளிக்கப்பட்டது.