tamilnadu

img

காங்கேயம் வறட்சி பகுதி பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கொடுக்க விவசாயிகள் கோரிக்கை

காங்கேயம் வறட்சி பகுதி பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கொடுக்க விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர், செப். 15 - திருப்பூர் மாவட்டத்தில் வறட்சி யான காங்கேயம் பகுதியில் விவசாயி களுக்கு ஒரே வாழ்வாதாரமாகத் திக ழும் பால் உற்பத்திக்கு நியாயமான கொள்முதல் விலை கொடுக்க வேண் டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  கோரியுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட் டத்தில் நல்லிகவுண்டன் வலசு, சிக்காம் பாளையம் ஆகிய இரு இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புதிய கிளை அமைப்பு கூட்டங்கள் நடை பெற்றன.  பரஞ்சேர்வழி கிராமம், நல்லிக வுண்டன்வலசு கிளை அமைப்பு கூட்டம்  சனியன்று காலை என்.கே.குப்புசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர்  மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் கலந்து கொண்டு உரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் பொன்.வேலுச்சாமி, ராதாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  புதிய கிளையின் தலைவராக தமிழரசி, செயலாளராக சண்முகம், பொருளாளராக சாமிநாதன், துணைத்  தலைவராக கண்ணம்மாள், துணைச்  செயலாளராக காந்திமதி ஆகியோர்  நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட் டனர். இக்கூட்டத்தில், காங்கேயம் வட் டத்தில் வறட்சியான பகுதியில் விவசா யிகளுக்கு ஒரே வாழ்வாதாரமான பால்  உற்பத்தியில் கட்டுபடியான விலை கிடைக்காமல் கஷ்டத்தில் இருந்து வரு கின்றனர். ஆகவே ஆவினுக்கு பால்  கொடுக்கும் விவசாயிகளுக்கு பசும்பா லுக்கு லிட்டர் 1-க்கு ரூ.45-ம், எருமை பாலுக்கு லிட்டர் 1-க்கு ரூ.60-ம் விலை  வழங்க வேண்டும். கலப்பு தீவனத் திற்கு கடந்த காலத்தை போல் மானியம்  வழங்க வேண்டும். பரம்பிக்குளம் ஆழி யாறு திட்ட சிவன்மலை-2, கோயில்பா ளையம் பிரிவு வாய்க்காலில் தண்ணீர் வருவதை நீர்வளத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.  காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், சென்னிமலை-காங்கேயம் ரோட்டில், நல்லிகவுண்டன்வலசு பிரிவிலிருந்து குறுக்கலையன் வலசு வழியாக பரஞ் சேர்வழியை அடையும் பழுதான ஊராட்சி ஒன்றிய தார் சாலையை உட னடியாக புதுப்பித்து தர வேண்டும். கீர னூர் ஊராட்சி, நால்ரோடு-கீரனூர் சாலையிலிருந்து ராசிபாளையம் முதல்  விராங்குட்டை வலசு வரை செல்லும் மண் சாலையை தார் சாலையாக மாற் றித் தர வேண்டும். பரஞ்சேர்வழி ஊராட்சி, நந்தவனத் தோட்டத்தில் இருந்து வரப்பாளையம் சாலை வரை  செல்லும் மண் சாலையை தார் சாலை யாக மாற்றி தர வேண்டும் என தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டுறவு சங்க முறைகேடு புகார் அதேபோல் நத்தக்கடையூர் ஊராட்சி, சிக்காம்பாளையம் கிளை அமைப்பு கூட்டம் சனியன்று மாலை  ஏ.செல்வராஜ் தலைமையில் நடைபெற் றது. விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர். குமார் கலந்து  கொண்டு உரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் பொன்.வேலுச்சாமி, நத்தக்காடையூர் ஆர்.செல்வராஜ் உட் பட பலர் கலந்து கொண்டனர். புதிய கிளையின் தலைவராக சி.பிர காஷ், செயலாளராக சி.ஏ.செல்வராஜ், பொருளாளராக சி.கே.சுப்பிரமணி ஆகி யோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப் பட்டனர். இதில் எஜமானர் புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தில் பயிர் கடன் வேண்டி விண்ணப் பித்த விவசாயிகள் அனைவருக்கும் முறையாக பயிர் கடன் வழங்குவதில் பாரபட்சம் நிலவுகிறது. விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக பயிர் கடன் வழங்க வேண்டும். திருப்பூர் மாவட்டம் ஆவின் பால் நிறுவனம் நத் தக்காடையூரில் உள்ள பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பால்  உற்பத்தியாளர்களின் பணம் பெரிய  அளவில் முறைகேடு நடைபெற்றுள் ளது. இதுகுறித்து மாவட்ட ஆவின் பொது மேலாளர் உடனடியாக விசா ரித்து தவறிழைத்தவர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கம் முறையாக செயல்பட உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.