பட்டா கேட்டு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஆவேசம்
தருமபுரி, செப்.30- நிலப்பட்டா, வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினத் தன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில முழுவதும் குடிமனைப் பட்டா இல்லாதவர்களின் எண்ணிக்கை 40 லட்சமாக உள்ளது. நீண்ட காலமாக அரசின் பல்வேறு புறம்போக்கு இடங்களில் குடியிருப்பவர்களுக்கு வகைமாற்றம் செய்து, பட்டா வழங்க சிறப்பு திட்டத்தை உடனடியாக அறி வித்து செயல்படுத்த வேண்டும். சுமார் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு, மீண்டும் பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். நடைமுறை யில் உள்ள குத்தகை விவசாயிகள் பாது காப்பு சட்டத்தை முழுமையாக செயல் படுத்த வேண்டும். 1963 இனாம் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரி மாறுதல் சட்டத் தின்படி, பட்டியல் செய்யப்பட்டுள்ள நிலங்களை கண்டறிந்து, நேரடியாக உழவு செய்யும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க தமிழ்நாடு அரசு தனி ஆணையம் உருவாக்க வேண்டும். பல தலைமுறை யாக கோவில், மடம், அறக்கட்டளை, வக்பு போர்டு-க்கு சொந்தமான இடங்களில் குடியிருப்போருக்கும், சாகுபடி செய்து வரும் விவசாயிக ளுக்கும் அறநிலையத்துறை சட்டப் பிரிவு 34 இன்படி பட்டா வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தினர் செவ்வாயன்று பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்ட னர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.குமார் தலைமை வகித் தார். இதில் விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பி.டில்லிபாபு, மூத்த தலைவர் பி.இளம்பரிதி, மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுனன், துணைத்தலைவர்கள் கே.என்.மல்லை யன், ஏ.நேரு, டி.ஆர்.சின்னசாமி, துணைச்செயலாளர்கள் ஆ.ஜீவானந் தம், பி.சக்கரவேல், விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் வி.ரவி, பொருளாளர் என்.பி.முருகன், துணைச் செயலாளர் பி.கிருஷ்ணவேணி உட்பட பெருந்திரளானோர் பங்கேற்றனர். இதன்பின் மாவட்ட வருவாய் அலுவ லர் கவிதாவிடம் சங்கத்தின் தலை வர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக் களை வழங்கினர். கோவை இதேபோன்று, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வி.பி.இளங்கோ வன், செயலாளர் வி.ஆர். பழனிசாமி, பொருளாளர் கே. தங்கவேல், மாவட்ட துணைத் தலைவர் ஏ.காளப்பன், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டத் தலைவர் டி.ரவிச் சந்திரன், மாவட்ட துணைச் செயலா ளர் ஜெ.ரவீந்திரன், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.செல்வராஜ், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செய லாளர் பி.கருப்புசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றி னர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பங் கேற்ற ஆர்ப்பாட்டத்தில் முடிவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கோரி மனுக்கள் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, அ.இ.வி.தொ.ச மாவட்டத் தலைவர் ஏ. துரைசாமி தலைமை வகித் தார். மாவட்டப் பொருளாளர் கே. மகாலிங்கம் முன்னிலையில், தாலுகா செயலாளர் கே.ஏ.பட்டீஸ்வரமூர்த்தி, ஆனைமலை தாலுகா தலைவர் பி. பழனிச்சாமி, விவசாயிகள் சங்க பொள் ளாச்சி தாலுகா தலைவர் ஸ்டாலின் பழனிச்சாமி, தாலுகா தலைவர் எ.ஈஸ்வ ரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இதில் ஆனை மலை, காளியாபுரம், ஊஞ்சலம்பட்டி, நெகமம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர் சார் ஆட்சியர் அவர்களை சந் தித்து 350 பேரின் கோரிக்கை மனுக் களை அளித்தனர். நாமக்கல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற் றும் அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் சார்பில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ் நாடு விவசாய சங்க மாவட்டச் செயலா ளர் பி.பெருமாள் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஆதிநாராயணன், பொருளாளர் இ. கோவிந்தராஜ், தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்க மாநில துணைத் தலை வர் சே.நல்லா கவுண்டர், அ.இ.வி.தொ.ச மாவட்டச் செயலாளர் வி.பி.சபா பதி, பொருளாளர் பி.செல்வராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். விவசாயி கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கள் கே.பூபதி, ஆர்.வேலாயுதம், துணைச் செயலாளர்கள் என்.ஜோதி, மு.து.செல்வராஜ், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே.மாணிக்கம், செயலாளர் கே. சின்னசாமி உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். சேலம் இதேபோன்று, சேலம் கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது. விவசாய சங்கம் மாநிலக் குழு உறுப்பினர் எ. அன்பழகன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட உதவி தலைவர் வி. தங்கவேல் தலைமை யில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஏ. ராம மூர்த்தி, விதொச சங்க மாவட்டச் செய லாளர் எஸ். கே.சேகர் ஆகியோர் பேசி னார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஈரோடு சத்தியமங்கலம், அந்தியூர் உள் ளிட்ட தாலுகாக்களில் விவசாய நிலங்க ளின் மதிப்பை பூஜ்ஜியமாக்கிய அரசின் உத்தரவை ரத்து செய்து, உண்மை யான மதிப்பிற்கு கொண்டு வந்து பட்டா வழங்க என வலியுறுத்தி மனு கொடுக் கும் இயக்கம் நடைபெற்றது. முன்ன தாக, கொங்கு கலையரங்கம் முன்பு திரண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக் கள், பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். இந்த இயக் கத்திற்கு, விவசாயத் தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் ஜி.கணபதி தலைமை வகித்தார். இதில் விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.வி. மாரிமுத்து, செயலாளர் ஏ.எம்.முனு சாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராக வன், பொருளாளர் எஸ்.மாணிக்கம், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ர மணியன், செயலாளர் கே.மாரப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், மாவட்ட வருவாய் அலுவலரிடம் 1150 மனுக்கள் வழங்கப்பட்டன. நீலகிரி அனுபவ நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும். மின் இணைப்பு இல்லாத குடும்பங்களுக்கு உடனடியாக மின்சா ரம் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். வன விலங்கு பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். வனவிலங்கு தாக்குதல்களில் மரணமடைந்தவர்க ளின் குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடி இழப் பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும். சாதி ஆணப்படு கொலைக்கு எதிராக தனிசட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கூடலூர் கோட்டாட்சி யர் அலுவலகம் முன்பு செவ்வா யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் வாசு தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் வி.ஏ.பாஸ்கரன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் யோகண் ணன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி பன்னீர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலை வர் பெரியார் மணிகண்டன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ராசி ரவிக் குமார், மாதர் சங்க நிர்வாகி லீலா வாசு, சிபிஎம் ஏரியா செயலாளர்கள் சுரேஷ், ரமேஷ், ராஜன், ஜோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
                                    