tamilnadu

img

மீண்டும் துவங்கிய குறுக்குப்பாறையூர் பிரச்சனை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் கைது

மீண்டும் துவங்கிய குறுக்குப்பாறையூர் பிரச்சனை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் கைது

சேலம், ஜூலை 24- அரசிராமணி அருகே குடியிருப்பு பகுதியில் குப்பைக்கழிவுகளை கொட் டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திடக் கழிவு மேலாண்மை திட்டத்தினை மாற்று இடத்தில் செயல்படுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினரை காவல் துறையி னர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அரசிராமணி பேரூராட்சி, 14  ஆவது வார்டுக்குட்பட்ட குறுக்குப் பாறையூரில் குப்பைக்கழிவுகளை கொட்டுவதற்கு தமிழக அரசு சார்பில்,  ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு  மேலாண்மை திட்ட பணிகள் துவங்கப் பட்டு நடைபெற்று வந்தது. இத்திட் டத்தை மாற்று இடத்தில் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலை யில், கடந்த ஒரு மாத காலமாக பணிகள்  நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலை யில், வியாழனன்று மீண்டும் இத்திட் டத்தின் பணிகளை பேரூராட்சி நிர்வாகத் தின் சார்பில் தொடர்ந்ததால், அப்பகுதி  பொதுமக்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதையடுத்து அங்கு வந்த காவல்  துறையினர் விவசாயிகள் சங்கத்தின் தாலுகா தலைவர் ராஜேந்திரன் உட்பட  போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற் பட்டோரை கைது செய்தனர்.