tamilnadu

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு

கோவை, ஆக.29– கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தால், விவ சாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வெள்ளியன்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளி யன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக்குழு சார் பில் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, கோவை மாவட்ட வளர்ச்சி என்ற பெயரில் கிழக்கு மற்றும் மேற்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்த்து கடந்த 8 ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். தற்போது திட்டமிட்ட கிழக்கு புறவழிச்சாலையை சிறிது மாற்றி அமைத்து பல்லடம் தாலுகா, செம்பிபாளையத்தி லிருந்து பெரியநாயக்கன்பாளையம் வரை புதிய சாலை  அமைக்கும் பணிகள் குறித்த தகவல்கள் வெளியாகி வரு கிறது. ஆனால் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை கள் இதுபற்றி தெரியாது என்கின்றனர். இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு அதனால் மக்க ளுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அரசு, விவசாய நிலங்களை அழிக்கும் தற்போ தைய திட்டத்தை கைவிட்டு, மாற்றுத் திட்டங்களை பரிசீ லிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிச் சாமி மற்றும் நிர்வாகிகள் என்.ஆறுச்சாமி, சங்கரன், ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மானைக்கண்டு பயந்த புலி

உதகை, ஆக.29- பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டும் மழையில் மான் கூட்டம் ஒடி வந்ததை பார்த்து பயந்து சாலையில் நின்ற புலியின் வீடியோ காட்சிகள் இனையத்தில் வைர லாகி வருகிறது.  நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக சரணா லயத்தை ஒட்டி கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் உள்ளது. இந்த இரண்டு புலிகள் காப்பகத்தின் வழி யாக கூடலூர் மைசூர் செல்லக்கூடிய தேசிய நெடுஞ் சாலை உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் அடிக் கடி வனவிலங்குகள் சாலையை கடப்பது வழக்கமான ஒன்றா கும். இந்த நிலையில் பந்திப்பூர் புலிகள் காப்பக தேசிய நெடுஞ்சாலையில் கொட்டும் மழையில் சாலையில் நடந்து சென்ற புலி ஒன்று துள்ளி குதித்து ஓடிய மான் கூட்டத்தை பார்த்து பயந்து நின்றது சிறிது நேரம் என்ன நடக்கிறது என்று  தெரியாமல் சாலையில் அமர்ந்திருந்த புலி பின்பு வனப் பகுதிக்கு சென்றது. இந்தக் காட்சிகளை வாகனத்தில் சென்ற ஒருவர் செல்போனில் பதிவு செய்து தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் வர்த்தகப்போருக்கு எதிராக  இடதுசாரிகள் பிரச்சாரம், கருத்தரங்கம்

ஈரோடு, ஆக.29- இந்தியா மீது வர்த்தகப் போர் தொடுத் திருக்கும் அமெரிக்காவைக் கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் இடதுசாரி கட்சிகள் தெருமுனை பிரச்சாரம், கருத்தரங்கம் நடத் திட முடிவு செய்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட்கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட், லெனி னிஸ்ட்) லிபரேசன் ஆகிய கட்சிகளின் ஆலோ சனைக் கூட்டம் ஈரோடு சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற் றது. கூட்டத்திற்கு சிபிஐ தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.டி.பிரபாகரன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், இந்தியா மீதான அமெரிக்க டிரம்பின் வர்த்தகப் போரைக் கண்டித்து செப்டம்பர் 5ஆம் தேதி 10 இடங் களில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்து வது என்று முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து செப்டம்பர் 7ஆம் தேதி மாநிலத் தலைவர்கள் பங்கேற்கும் கருத்தரங்கினை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. சிபிஎம் மாவட் டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிசாமி, பி.சுந்தரராஜன், சிபிஐ எம்.குணசேகரன், எம். ஆர்.சுரேஷ்குமார், டி.கண்ணன், என்.ரமணி, சிபிஐ(எம்எல்) மாவட்டச் செயலாளர் ஜே.பி. கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மனைவியின் தங்கைக்கு பாலியல் வன்கொடுமை

உதகை, ஆக.29– கூடலூர் அருகே மனைவியின் தங் கையை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை மகளா நீதி மன்றம் தீர்ப்பளித்தது. நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் முதல் இரு குழந்தைகள் உடல்நல குறைவு பாதிப்பால் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால் இரு மகள்களுடன் வசித்து வந்துள்ளனர். தம்ப திகள் இருவரும் கூலி வேலை செய்து வரு கின்றனர். 3ஆவது மகளை ரமேஷ் (29) என் பருக்கு திருமணம் செய்து வைத்தனர். இந் நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆக.20 ஆம்தேதி அன்று மருத்துவப் பரிசோதனைக் காக மூன்றாவது மகள் மற்றும் 16 வயது டைய கடைசி மகள் என இருவரையும் இவர்க ளின் தாய் மருத்துவமனைக்கு அழைத்து  சென்றுள்ளார். அப்போது கடைசி மகளை பரி சோதித்த மருத்துவர்கள் அவர் 5 மாத கர்ப்ப மாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.  இத னால் அதிர்ச்சியடைந்த தாய், இதுகுறித்து அவரிடம் விசாரித்துள்ளார்.  அப்போது கடந்த 6 மாதத்திற்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அக்கா கணவர் ரமேஷ், வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இது குறித்து கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆய்வாளர் சித்ரா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு ரமேஷை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை உத கையில் உள்ள மகிளா கோர்ட்டில் நடை பெற்று வந்தது. இதில் வெள்ளியன்று தீர்ப்பு  வழங்கப்பட்டது. ரமேஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு 20  ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயி ரம் அபராதமும் விதித்து நீதிபதி எம்.செந்தில் குமார் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தமிழக அரசிடம் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகையை மாவட்ட நிர்வாகம் பெற்று வழங்க வேண்டும் எனவும்  அறிவுறுத்தினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.செந்தில்குமார் ஆஜ ராகி வாதாடினார்.