சரியும் தக்காளி விலை: விவசாயிகள் கவலை
தருமபுரி, செப்.2- தருமபுரி மாவட்டத்தில் மார்க்கெட்டிற்கு தக்காளி யின் வரத்து அதிகரித்துள்ளதால், விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. குறிப்பாக, கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடைந் துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் விவசாயிகள் தங்களது நிலங்க ளில் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்தனர். இங்கு சாகுபடி செய்யப்படும் தக்காளி பாலக்கோடு தினசரி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து பெங்களுரு, கேரளம், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. தக்காளியில் நல்ல லாபம் கிடைப்ப தால், மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் தக்கா ளியே பிரதானப் பயிராக சாகுபடி செய்து வருகின்ற னர். தற்போது தக்காளியின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்ற னர். கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், 25 கிலோ தக் காளி பெட்டி 1500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விற்பனையானது. இந்நிலையில், செவ்வாயன்று 25 கிலோ எடை கொண்ட பெட்டி ரூ.500 முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனையானது. தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்ததால் அதிகளவு மகசூல் பெற்று மார்க்கெட்டிற்கு வரும் தக்காளியில் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் தக்காளியின் விலை குறைந்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
