tamilnadu

img

முதலமைச்சர் கோப்பை போட்டியில் சிறப்பிடம்

முதலமைச்சர் கோப்பை போட்டியில் சிறப்பிடம்

நாமக்கல், அக்.4- முதலமைச்சர் கோப்பை போட்டியில் கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்தனர். கல்லூரி மாணவர்களுக்கிடையே அண் மையில் நாமக்கல்லில் மாவட்ட அளவி லான முதலமைச்சர் கோப்பை விளை யாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், கே.எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி  மாணவர்கள் கலந்து கொண்டு கைப்பந்து, கையுந்து பந்து ஆகியவற்றில் முதலிடமும், மட்டைப்பந்து, வளைகோல் பந்து, மேசைப் பந்து, கூடைப்பந்து ஆகியவற்றில் இரண் டாம் இடமும், கையுந்து பந்து போட்டியில் மூன்றாம் இடத்தையும் வெற்றி பெற்றனர். மேலும், மகளிர் கூடைப்பந்து போட்டியில் மூன்றாம் இடமும், மற்றும் தடகள போட்டி யில் ஐந்து தங்கமும், ஒரு வெள்ளியும் பெற்று  கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி  மாணவர்கள் சாதனை படைத்தனர்.  இந்நிலையில், வெற்றி பெற்ற மாணவர் களை கே.எஸ்.ரங்கசாமி கல்வி நிறுவனத்தின் தாளாளர் ஆர்.சீனிவாசன், துணைத் தாளா ளர் கே.எஸ்.சச்சின், கல்லூரி முதல்வர் எம். பிரசன்னா ராஜேஷ் குமார், உடற்கல்வித் துறை இயக்குநர் எஸ்.முத்துக்கண்ணன் உள் ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.