லை விரிவாக்க பணிக்காக வயது முதிர்ந்த தம்பதிக்கு நெருக்கடி
கோபி, ஜூலை 4- கோபி அருகே சாலை விரி வாக்க பணிக்காக நெடுஞ் சாலைதுறையின் இடத்தில் குடியி ருக்கும் வீட்டை காலி செய்ய வேண்டிய சூழல் வயது முதிர்ந்த தம்பதிக்கு ஏற்பட்டுள்ளது. வசிக்க இடமில்லாமல், இவர்கள் மாற்று இடம் வழங்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி - குன்னத்தூர் சாலையில் நெடுஞ் சாலைதுறையினர் சாலை விரி வாக்க பணிக்காக வடிகால் அமைக்கும் பணிகள் தொடங்கி யுள்ளது. இந்நிலையில், வேட்டை காரன்கோவில் பகுதியில் நெடுஞ் சாலைதுறையின் எல்லை பகுதிக ளில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடு கள் மற்றும் வணிக வளாக கடை களை அகற்ற வேண்டி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனைய டுத்து, பொதுமக்கள் தாமாகவே முன்வந்து அகற்றி வருகின்றனர். இதனையடுத்து வேட்டைகாரன் கோவிலில் கடந்த 40 ஆண்டுக ளுக்கு மேலாக குடியிருந்து வரும் யோகமணி / கருணையம்மாள் முதிய தம்பதியான இவர்கள் குடி யிருக்கும் குடியிருப்பு நெடுஞ் சாலைதுறையினரின் இடத்தில் ஆக்கிரமிப்பில் உள்ளதால் கடந்த இரண்டு மாத்திற்கு முன் நோட்டீஸ் வழங்கி வீட்டை காலி செய்ய வேண் டும் என வலியுறுத்தி வந்துள்ள னர். யோகமணி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக உடல் நலம் பாதிக்கப்பட்டு யானைகால் நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் வேலைக்கு செல்ல முடி யாமல் மிகவும் அவதிப்பட்டு வரு கின்றனர். இச்சூழலில் நெடுஞ் சாலைதுறையினர் சாலை விரி வாக்க பணிக்காக நெடுஞ் சாலைதுறையினர் யோகமணி, கருணையம்மாள் குடியிருந்து வரும் வீட்டை காலி செய்ய வேண் டும் என நாள்தோறும் மிரட்டும் தோரணையில் செயல்பட்டு வரு கின்றனர். அரசின் சார்பில் மகளிர் உரிமை தொகையும் தங்களுக்கு கிடைக்கவில்லை முதியோர் ஓய்வூ தியம் கிடைக்க விண்ணப்பித்தும் அரசின் சலுகைகள் கிடைக்க வில்லை. இந்நிலையில், கடந்த 40 ஆண்டுகளாக சாலையிலிருந்து 50 மீட்டர் தொலைவில் குடியிருந்து வரும் குடியருப்பை காலி செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர். இதனால் யோகமணியும் அவரது மனைவியும் நடுத்தெரிவில் நிற்கதி யாக நிற்பதால் கருணை அடிப் படையில் குடியிருப்பதற்கு மாற்று இடம் வழங்க வேண்டி முதிய தம் பதியினர் கோரிக்கை விடுத்துள்ள னர்.