tamilnadu

img

தி.மு.ராசாமணி 13ஆம் ஆண்டு நினைவஞ்சலி

தி.மு.ராசாமணி 13ஆம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்பூர், செப். 6 – திருப்பூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்  முன்னாள் மாநிலக்குழு உறுப்பினராகவும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினராக வும், எழுத்தாளராகவும், தீக்கதிர் விநியோகிப்பாளராகவும் பன்முகத் திறமையுடன் செயல்பட்ட தோழர் தி.மு.ராசாமணி யின் 13ஆம் ஆண்டு நினைவு தினம் சனியன்று கடைப்பிடிக்கப் பட்டது. திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையம் முன்பாக நடை பெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் பி.ஆர். கணேசன் தலைமை ஏற்றார். சங்கத்தின் மாநில செயற்குழு  உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகியோர் ராஜாமணியின் பன் முகப் பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினர். தமிழ்நாடு முற்போ்ககு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் நிர்வாகிகள், கட்சி அணியினர் பெருந்திரளானோர் கலந்து கொண்டு தி.மு.ராசாமணிக்கு மலர் அஞ்சலி செலுத் தினர்.