சர்வதேச போட்டியில் பங் கேற்க மாற்றுத்திறனாளி மாணவி கோரிக்கை
சேலம், ஜூலை 21- தேசிய அளவிலான மல் யுத்த போட்டியில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளி மாணவி, சர்வதேச போட்டி யில் பங்கேற்க தமிழக அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள் ளார். சேலம் மாவட்டம், மேட் டூரை அடுத்த ஜலகண்டாபு ரம், ராஜாகோவில்வலவு பகு தியைச் சேர்ந்த நெசவு தொழி லாளியான முத்துகுமார் - வளர்மதி ஆகியோரின் மகள் திவ்யதர்சினி. பார்வை குறை பாடுடைய இவர் சேலம் அரசு கலைக்கல்லூரியில் முத லாம் ஆண்டு படித்து வரு கிறார். விளையாட்டில் ஆர் வம் கொண்ட திவ்யதர்சினி, ஜூடோ பயிற்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகிறார். மேலும், கை மல்யுத்தம் விளையாட் டில் ஆர்வம் கொண்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக தீவிர பயிற்சி பெற்று வந் தார். இந்நிலையில், கேரளா வில் நடைபெற்ற கை மல்யுத் தம் போட்டியில் கலந்து கொண்டு, வலது கை, இடது கை என இரு பிரிவுகளிலும் கலந்து கொண்டு, தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங் களை வென்றார். தொடர்ந்து, செப்.12 ஆம் தேதி பல்கேரியா நாட்டில் நடக்கும் மல்யுத்த போட்டி யில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், போதிய வசதி இல் லாததால் அங்கு செல்ல முடி யாமல் தவித்து வருகிறார். இதுகுறித்து திவ்யதர்சினி கூறுகையில், பல்கேரியா நாட்டில் நடக்கும் கை மல் யுத்தப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன். அங்கு செல்ல ரூ.2 லட்சம் தேவைப்படுகிறது. எனது தந்தை நெசவு தொழில் செய்து வருகிறார். இதனால் அங்கு செல்ல போதிய வச தியில்லை. எனவே தமிழக அரசு உதவி செய்ய வேண் டும் என கோரிக்கை விடுத் துள்ளார்.