மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், செப்.25- நூறு நாள் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு நாள் வேலை வழங்க வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். மாற் றுத்திறனாளிகளுக்கு இலகுவான வேலைகள் வழங்க வேண்டும். அதிக தூரம் மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் செல்லும் போது வாகன ஏற்பாடு செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தினர் வியாழனன்று நாமக்கல் மாவட்டம், மோக னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றியத் தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.முருகேசன், மாவட்டத் தலைவர் நாகேஸ்வரி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முடிவில், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டது.