மாற்றுத்திறனாளிகள் சங்க தருமபுரி மாநாடு
தருமபுரி, செப்.10- மாற்றுத்திறனாளிகள் சங்க தருமபுரி வட்ட மாநாட் டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் தரும புரி வட்ட 5 ஆவது மாநாடு, முத்து இல்லத்தில் செவ் வாயன்று நடைபெற்றது. வட்டத் துணைத்தலைவர் ராம சாமி தலைமை வகித்தார். சங்கத்தின் கொடியை சரஸ் வதி ஏற்றி வைத்தார். மாவட்டச் செயலாளர் எம்.மாரி முத்து சிறப்புரையாற்றினார். வட்டச் செயலாளர் கே. சுசிலா அறிக்கையை முன்வைத்தார். இம்மாநாட்டில், ஆந்திராவைப் போன்று தமிழ்நாட்டிலும் உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். இலவச வீட்டு மனை மற்றும் பட்டா கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திற னாளிகளின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். அரசு மற்றும் தனியார் துறையில் மாற்றுத்திறனாளி களுக்கு சட்டப்படியான 5 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் வட்டத் தலை வராக பழனி, செயலாளராக சீனிவாசன், பொருளாள ராக ராமசாமி, துணைத்தலைவர்களாக சுசீலா, இளங்கோ, துணைச்செயலாளர்களாக தீர்த்தகிரி, சரண் ராஜி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.