tamilnadu

பைக் டாக்ஸியை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸியை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

கோவை, ஆக.4- தமிழகத்தில் பைக் டாக்ஸியை தடை செய்யக் கோரி  சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் வாக்காளர் அடையாள அட்டையை திருப்பி கொடுக்க மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக இயக்கப் பட்டு வரும் பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும்.  சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்த அனு மதிக்க கூடாது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி கோவை மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டு நர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் திங்களன்று கோவை ஆட்சி யர் அலுவலம் அருகே கையில் பதாகைகளை ஏந்தி  கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஓட்டுநர்கள் சுமார் 100க்கும் மேற்பட் டோர் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி, வாக்காளர் அடையாள அட்டைகளை திருப்பி வழங்க  உள்ளதாக தெரிவித்தனர். இதேபோல 2 ஆயிரத்திற் கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் குடும்பத்துடன் வாக்காளர் அடையாள அட்டையை அரசிடமே வழங்குவோம் என  தெரிவித்தனர்.