பாலஸ்தீனம் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
தருமபுரி, ஆக.30- பாலஸ்தீனம் மீதான இஸ்ரே லின் இனப்படுகொலையை கண் டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தொடங்கிய கொடூ ரத் தாக்குதல், தொடர்ந்து நீடித்து வருகிறது. ‘ஹமாஸ் அமைப்பின் தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம்’ என்று கூறிக்கொண்டு தொடங் கப்பட்ட இந்தத் தாக்குதலால் ஆயி ரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீ னர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ் ரேலுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதி பத்திய நாடுகளைக் கண்டித்தும், இஸ்ரேல் அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையை உட னடியாக நிறுத்த வேண்டும் என் பதை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் மற்றும்பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தினர் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், அரூரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தின் வட்டச்செயலாளர் தமிழ் செல்வி தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ. வில்சன், மாவட்டச் செயலாளர் எம். மாரிமுத்து, மாவட்டத் தலைவர் கே.ஜி.கரூரான், வட்டத் தலைவர் கே.காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
