சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
திருப்பூர், செப்.12- சாலையோர வியாபாரிகள் வாழ்வாதா ரப் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல் படுத்த வேண்டும் என தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் (சிஐடியு) மாநில ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங் கத்தின் மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட் டம் திருப்பூர் சிஐடியு அலுவலகத்தில் வெள் ளியன்று நடைபெற்றது. ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் பிச்சைமுத்து தலைமை வகித்தார். சிஐடியு மாநிலக்குழு முடிவுகளை விளக்கி மாநில துணைத்தலைவர் தெய்வ ராஜ் பேசினார். வேலை அறிக்கையை மாநில கன்வீனர் கருப்பையன் முன்வைத்தார். கூட் டத்தில் பாலன், செல்வி, செல்வம், முத்துவிஜ யன், விஜயலட்சுமி, சங்கமேஸ்வரன் உள் ளிட்ட ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள்: சாலையோர வியாபாரிகள் வாழ்வாதா ரப் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல் படுத்த வேண்டும். திருப்பூர் மாநகராட்சி உட் பட அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சிகளிலிலும் விடுபட்ட சாலையோர வியா பாரிகளை கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகளை வலுக்கட்டாயமாக அப்பு றப்படுத்துவதை கைவிட வேண்டும். வெண் டிங் கமிட்டி தேர்தல் நடத்தாத மாநகராட்சி, நக ராட்சி, பேரூராட்சிகளில் தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் நடத்தும் போது சட்டப்படி முறையான அறிவிப்பு கொடுத்து ஜனநாய கப் பூர்வமாக தேர்தலை நடத்த வேண்டும். வெண்டிங் கமிட்டி தேர்தல் நடைபெற்ற இடங் களில் வென்டிங் கமிட்டியை கூட்டி முடி வுகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இன்று தோழர் கே.தங்கவேல் நினைவு தினம்
திருப்பூர், செப்.12- தோழர் கே.தங்கவேல் 5 ஆம் ஆண்டு நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினரும், திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் - வின் 5 ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி திருப்பூர் மாநக ராட்சி அலுவலகம் முன்பு சனி யன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் அனைத்து கட்சியினர் பங் கேற்க உள்ளனர்.