tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கஞ்சா விற்பனை

ஈரோடு, அக்.4- ஈரோடு மாவட்டம், சென் னிமலை அருகே உள்ள ஈங்கூர் கூத்தம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் அங்கு  சென்று, கஞ்சா பொட்டலங் களை பதுக்கி வைத்து விற் பனை செய்து வந்த வாலி பரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் பீகார் மாநிலம் சரண் மாவட் டத்தை சேர்ந்த சுமன்குமார் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீ சார் கைது செய்து, அவரிட மிருந்து 550 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதே போல், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்றதாக ஈரோடு மாவட் டத்தில் 4 பேரை போலீசார் கைது செய்து, 1.300 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கோவில் வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைக்க முடிவு

கோவை, அக்.4- வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் வளா கத்தில் சுற்றுச் சுவர் அமைக்க கோவில் நிர் வாகம் முடிவு செய்துள்ளது. கோவை பூண்டி வனப்பகுதியிலிருந்து வெளியேறும் ஒற்றை காட்டு யானை அடிக் கடி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் வளா கத்தில் உலா வருகிறது. இந்நிலையில், வியா ழனன்று மாலை திடீரென கோவில் வளா கத்திற்குள் ஒற்றை காட்டு யானை, இரும்பு  கம்பிகளை சேதப்படுத்தி புகுந்ததால் பக் தர்கள் அலறியடித்து ஓடினர். இச்சம்பவம் குறித்தும், காட்டு யானை கோயில் வளாகத் தில் வராமல் தடுப்பது குறித்தும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் அறங்காவலர்கள், வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் வெள்ளியன்று ஆலோசனை  மேற்கொண்டனர். இதில், வெள்ளிங்கிரி ஆண் டவர் கோவில் படிகட்டு அருகே இரும்பு  கம்பி தடுப்புகளும், கோவில் வளாகத்தை சுற்றி சுவர் அமைக்கவும் முடிவு செய்யப் பட்டது.