tamilnadu

img

19 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த அணைப்பாளையம் ரயில்வே மேம்பாலம் பணி மீண்டும் துவக்கம்

19 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த அணைப்பாளையம் ரயில்வே மேம்பாலம் பணி மீண்டும் துவக்கம்

திருப்பூர், ஆக. 27 - பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டி ருந்த அணைப்பாளையம் ரயில்வே மேம்பா லப் பணிகள் தற்போது மீண்டும் துவங்கப்பட் டுள்ளது. விரைவில் முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்ட வர வேண் டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அணைப்பாளையம் பகுதியில், மங்கலம்  சாலை – கல்லூரி சாலை இணைக்கும் வகை யில் நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட  பாலமும், ரயில் தண்டவாளத்தின் குறுக்கே  மேம்பாலம் கட்ட கடந்த 2006 ஆம் ஆண்டு  ரூ.6.50 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக வழக் குகள் தொடரப்பட்டதால் கட்டுமானப் பணிகள்  கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து, 2017  ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகளுக்கான திட் டத்தின் மதிப்பீடு ரூ.19.29 கோடி உயர்த்தப் பட்டு மீண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட் டது. நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலமும், ரயில் வழித்தடத்தின் குறுக்கி லும் பாலம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இந்த  மூன்றையும் இணைக்கும் வேலைகள் மட்டும்  தொடர்ந்து இழுபறியாக இருந்தன. கடந்தாண்டு, பாலம் கட்டுமானப் பணிக்கு  நிலம் எடுப்பு தொடர்பான அனைத்து வழக்கு களும், தள்ளுபடி செய்யப்பட்டு, நெடுஞ்சா லைத் துறைக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.  இதையடுத்து பணியை நிறைவு செய்ய ரூ.42  கோடி நிதி தேவை என திட்ட மதிப்பீடு தயா ரிக்கப்பட்டு நிதியும் பெறப்பட்டது. இந்நிலை யில் தற்போது அந்தரத்தில் இருந்த இருபுறம்  பாலத்தையும் இணைக்கும் பணிகள் வேக மெடுத்துள்ளது. பாலப் பணிகளுக்கு ஏற்ப போக்குவரத்து வழித்தடம் மாற்றப்பட்டு, பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரச் செய லாளர் ச.நந்தகோபால் கூறுகையில், திருப் பூர் மாநகராட்சிக்குட்பட்ட அணைப்பாளை யம் பகுதியில் கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்கு  முன்பு இந்த பாலப் பணிகள் துவங்கப்பட் டது. ஆட்சி மாற்றம், நீதிமன்ற வழக்கு உள் ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால் இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் அரசு அலுவலர்களை சந்தித்து மனு  அளிப்பது, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது  என தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது  மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது வர வேற்கத்தக்கது. அதேசமயம் இம்முறை பணி களை பாதியில் நிறுத்தாமல், முழுமையாக பாலப் பணிகளை முடித்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதே போல் பாலத்தையொட்டி உள்ள சாலைகள் குண்டும் குழியுமாகி அவ்வழியில் செல்லும்  வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவர்கள்  விபத்துக்குள்ளாகின்றனர். அணைப்பாளை யம் பகுதியில் பாலத்தின் இருபுறமும், தர மான அணுகு சாலை அமைத்துத் தர வேண் டும் எனவும் வலியுறுத்தினார்.