tamilnadu

img

தீக்கதிர் உலக செய்திகள்

கச்சா எண்ணெய் தேவை  23 சதவீதம் அதிகரிக்கும் 

2050 இல் உலகளவில் கச்சா எண்ணெய்  தேவை 23 சதவீதம் வரை அதிகரிக்கும் என பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக் (OPEC) தெரிவித்துள்ளது. மேலும் நாளொன்றுக்கு 308 மில்லியன் பீப்பாய்கள் என்ற அளவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் அளவானது 378 மில்லியன் பீப்பாய்களாக உயரும் என கூறப்பட்டுள்ளது. 2050 இல் மக்கள் தொகை 970 கோடியாக உயரும் என கூறப்பட்டுள்ள நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தியும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப்பை கேலி செய்து  சிரித்த ஐரோப்பிய தலைவர்கள்   

அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட நான் தான் உதவினேன் என டிரம்ப் பேசி வரு கிறார். அப்படிப் பேசும்போதெல்லாம் அவர் அர்மீனியாவுக்குப் பதிலாக ‘அல்பேனியா’ என்றே குறிப்பிடுகிறார். சமீபத்தில் அவர் கூறுவதை கேட்ட ஐரோப்பிய ஒன்றிய தலை வர்கள் டிரம்ப்பை கேலி செய்து சிரித்துள்ளனர். 2024 இல் ஒரு நேர்காணலிலும், இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மருடனான செய்தியாளர் சந்திப் பிலும் இதேபோல அவர் தவறாகக் குறிப்பிட் டுள்ளார்.

ரஷ்யாவை குறிவைக்கும்  ஐரோப்பிய நாடுகள் 

ஜெர்மனின் விமான நிலைய வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததால் விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதற்கு முன் டென்மார்க் மற்றும் நார்வே விமான நிலையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்த நிலையில், இது ரஷ்யாவின் நடவடிக்கை தான் என  சில ஐரோப்பிய தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சமீப வாரமாகவே நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தருவதாக ரஷ்யா மீது குற்றம்சாட்டி வருகின்றன.

தேவாலய கட்டுமானப் பணியில்  விபத்து : 36 பேர் பலி 

எத்தியோப்பியாவில் தேவாலய கட்டுமானப் பணியின்போது நடைபெற்ற விபத்தில் 36 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். வழிபாட்டிற்கு மக்கள் வந்த நேரத்தில் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த பலர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக வகுக்கப் படாததே இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்கன் வெளியுறவு அமைச்சர்  அக்.10 இல் இந்தியா வருகை 

ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் வெளி யுறவுத் துறை அமைச்சர் ஆமிர் கான் முத்தாகி அக்டோபர் 10 அன்று இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அதிகாரிகளுடன் இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது  என இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு ஆப்கனை தலிபான்களிடம் அமெரிக்கா கொடுத்த பிறகு தலிபான் அரசின் அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல்முறையாகும்.