tamilnadu

img

சிபிஎம் கிளை அலுவலகம் திறப்பு

சிபிஎம் கிளை அலுவலகம் திறப்பு

கோவை, அக்.12- சின்னியம்பாளையத்தில் சிபிஎம் கிளை அலுவலகம் திறக்கப்பட்டது. கோவை மாவட்டம் சின் னியம்பாளையத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை அலுவலக கட்டு மானப் பணிகள் நிறை வடைந்து, ஞாயிறன்று திறப்பு விழா நடைபெற்றது. கே.ஆர். ஜெயராமன் செங்கொடியை ஏற்றி வைத்தார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் கிளை அலுவலகத்தைத் திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் சி.  பத்மநாபன் இடதுசாரி இயக்க தலைவர்க ளின் புகைப்படங்களையும், மாவட்ட செயற் குழு உறுப்பினர் வி. தெய்வேந்திரன் சின்னி யம்பாளையம் தியாகிகளின் படத்தையும் திறந்து வைத்தனர். இதைத்தொடர்ந்து நடை பெற்ற பொதுக்கூட்டத்தில், தேவராஜன் வர வேற்றார். கே.காமராஜ், சி.பத்மநாபன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சி யில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட் டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடி வில், ஜி.கருப்புசாமி நன்றி கூறினார்.