tamilnadu

img

சாதி மறுப்பு திருமணம் செய்ததால் மிரட்டல் எஸ்பி அலுவலகத்தில் காதல் தம்பதி தஞ்சம்

சாதி மறுப்பு திருமணம் செய்ததால் மிரட்டல்  எஸ்பி அலுவலகத்தில் காதல் தம்பதி தஞ்சம்

கோவை, செப்.18- பொள்ளாச்சி அருகே சாதி மறுத்து,  காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியை கொலை மிரட்டல் விடுத்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. இதனிடையே தங்களுக்கு பாது காப்பு வேண்டும் என கோவை மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் அலுவலகத் தில், காதல் தம்பதியினர் அடைக்கலம் புகுந்தனர்.  கோவை மாவட்டம், பொள்ளாச்சி யைச் சேர்ந்த 26 வயதான பவிப்பிரியா,  அப்பகுதியில் உள்ள கல்லூரியில் எம்.சி.ஏ. படித்து வந்தார். கடந்த நான்கு  ஆண்டுகளுக்கு முன்பு, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சேதுபதியை அவர்  காதலித்து வந்தார். இவர்களின் காத லுக்கு பவிப்பிரியாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனி டையே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, பவிப் பிரியாவின் பெற்றோரை சமாதானப் படுத்த முயன்றபோது, அவர்கள் அவ ரைத் தாக்கி, வீட்டில் அடைத்து வைத்து  மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன பவிப்பிரியா, ஆன்லைன் மூலம் காவல் துறைக்கு புகார் அளித்தார். அதன் அடிப்படையில், பொள்ளாச்சி மகாலிங்கம் காவல் துறையினர் பவிப் பிரியாவை மீட்டனர். காவல் நிலை யத்தில், இனி தங்கள் மகளின் வாழ்க்கையில் தலையிட மாட்டோம்  என எழுதிக் கொடுக்க பவிப்பிரியா வின் பெற்றோர் மறுத்து விட்டனர். பெற்றோரின் மிரட்டல் காரணமாக  அச்சமடைந்த காதல் ஜோடி, சேதுபதி யின் வீட்டிற்குச் செல்லாமல் நண்பர்க ளின் வீட்டில் தங்கி, திருமணத்தை கோவை மாவட்டப் பதிவாளர் அலுவ லகத்தில் பதிவு செய்தனர். இந்நிலையில், பவிப்பிரியாவின் உறவினர்கள் சேதுபதியின் குடும்பத்தி னரை மிரட்டியுள்ளனர். தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதால், காதல்  ஜோடி கோவை மாவட்டக் காவல்துறை  கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு புகார் அளித்துள்ள னர்.  இவர்களுக்கு ஆதரவாக முற் போக்கு வழக்கறிஞர்கள் வெண்மணி, அ.கரீம், ஆறுச்சாமி உள்ளிட்டோர் உட னிருந்தனர். தமிழகத்தில் மற்றொரு ஆணவக் கொலை நடப்பதற்கு முன்பு காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் எஸ்பி அலுவலகத்தில் முறையிட்டனர்.