tamilnadu

img

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ஓட்டுநரை கொலை செய்து காரை திருடிய குற்றவாளிக்கு மூன்று ஆயுள் தண்டனை

திருப்பூர், ஆக.2- மூலனூர் பகுதியில் கார் ஓட்டுநரை கொலை செய்து விட்டு, காரை திருடி சென்ற குற்றவாளிக்கு தாராபுரம் கூடு தல் மாவட்ட நீதிபதி மூன்று ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்ப ளித்தார். திருப்பூர் மாவட்டம், மூலனூர் பகுதியில் கடந்த 2015 ஆம்  ஆண்டு செப்.25 ஆம் தேதி 30 வயது மதிக்கத்தக்க இளை ஞர் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டு சடலமாக  கிடந்தார். இதுகுறித்து மூலனூர் போலீசார் சடலத்தை கைப் பற்றி வழக்குப்பதிவு செய்தனர். இதில் கொலை செய்யப்பட்ட வர் தாராபுரம், தாளக்கரை பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என் பது தெரியவந்தது. வாடகை கார் ஓட்டுநரான இவரை செப்.24  ஆம் தேதி கரூருக்கு செல்ல வேண்டும் என்று ஒருவர் அழைத் துச் சென்றிருக்கிறார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட  காவல்துறையினர், திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஆர். எஸ். ரோட்டை சேர்ந்த வீரபாபு (36) என்பவரை கைது செய்த னர். விசாரணையில் வீரபாபு, கார் ஓட்டுநர் ஜெகதீசனை கொலை செய்து காரை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த வழக்கு விசாரணை தாராபுரம் நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. இதில் வீரபாபுவின் குற்றம் நிரூபிக்கப் பட்டதால், அவருக்கு மூன்று ஆயுள் தண்டனைகள் வழங்கி  கூடுதல் மாவட்ட நீதிபதி வெள்ளியன்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து வீரபாபு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

‘நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம்’ துவக்கம்

கோவை, ஆக.2- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில்,  “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் சனியன்று தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சனியன்று  சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  சார்பில், “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தை தொடங்கி  வைத்தார். கோவை மாவட்டம், எஸ்.எஸ் குளம் பகுதியிலுள்ள  அரசு பள்ளியில் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் இத் திட்டத்தை துவங்கி வைத்தார். இம்முகாமில் மாவட்ட ஆட்சி யர் பவன்குமார் க.கிரியப்பனவர், நாடாளுமன்ற உறுப்பி னர் கணபதி ப.ராஜ்குமார், தூய்மைப் பணியாளர் வாரிய தலை வர் ஆறுச்சாமி, மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்தி ரன், துணை மேயர் வெற்றிச்செல்வன், மாவட்ட வருவாய் அலு வலர் ஷர்மிளா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அரசு மேல்நிலைப்பள்ளி யில் வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, இத்திட்டத்தை தொடங்கி வைத் தார். இதில் மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி, சட்டமன்ற உறுப்பி னர் வி.சி.சந்திரகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு நர் பிரியா, இணை இயக்குநர் சாந்தகுமாரி மாநகர நல அலு வலர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.

பாம்பு சீண்டியதால்  பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை, ஆக 2- கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்,  பாம்பு சீண்டியதால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரி டையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள  லட்சுமி நகர், கிரீன்கார்டன் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் -  சித்ரா தம்பதியரின் மகன்கள் தீபக்ராஜ் (19), யஷ்வந்த்  (14). இதில் யஷ்வந்த் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜூலை 31  ஆம் தேதியன்று இரவு தனது வீட்டின் அருகே டியூசனுக்கு சென்ற யஷ்வந்தை, பாம்பு ஒன்று சீண்டியுள்ளது. இதை யாரிட மும் சொல்லாமல் படித்துக் கொண்டிருந்தபோது, திடீரென  மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தி னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிணத்துக்கடவில் உள்ள  தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கி ருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனிக்காமல் சனியன்று உயிரி ழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

வியாபாரிகளிடம்  ரூ.26.40 லட்சம் பறிமுதல்

கோவை, ஆக 2- எட்டிமடை சோதனைச்சாவடி வழியாக உரிய ஆவணங்க ளின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.26.40 லட்சத்தை காவல் துறை யினர் பறிமுதல் செய்தனர். கோவை – கேரளம் நெடுஞ்சாலையில் அடிக்கடி ஹவாலா  பணம் கடத்தல் மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடை பெற்று வந்தது. கடந்த மாதம், கேரளத்தைச் சேர்ந்த நகை வியாபாரிகளை தாக்கி, தங்கக் கட்டிகள் மற்றும் ரூ.30 லட்சம் கொள்ளைடிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், எட்டி மடை பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடி அமைக்கப்பட் டது. இந்நிலையில், சனியன்று சோதனைச்சாவடியில் உதவி  ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவையிலிருந்து கேரளம் நோக்கி சென்ற இருசக்கர வாகனம் ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அதில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் கவரிங் வளையல்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தில் வந்த வர்களிடம் விசாரித்தபோது, கேரளம் மாநிலம், திருச் சூரைச் சேர்ந்த அப்துல் அக்கீம் (49), அப்துல் ரகுமான்  (38) ஆகியோர் என்பதும், கேரளாவிலுள்ள நகைக்கடை யில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அவர் கள் வைத்திருந்த ரூ.26.40 லட்சம் பணத்திற்கு உரிய ஆவ ணங்கள் இல்லாததால் அதனை போலீசார் பறிமுதல் செய்த னர்.