நீதிமன்றம் புறக்கணிப்பு
திருப்பூர், செப். 8 - வழக்கறிஞர் சேமநல நிதியை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும், நீதிமன்றக் காலி பணியி டங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி திருப்பூரில் வழக்கறிஞர்கள் திங்களன்று நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனர். திருப்பூர் பார் அசோசியேசன், திருப்பூர் வழக்கறிஞர் சங்கம், திருப்பூர் மாவட்ட வழக்கறி ஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் கூட்டாக இப்போராட்டத் தில் பங்கேற்றனர்.