மதுபான கடை அமைக்க எதிர்ப்பு
சேலம், ஆக 25 - சேலம் மாவட்டம், தாரபுரம் கிராம ஊராட்சிக்குட்பட்ட, குடி யிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் மதுபான கடையை திறக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தாராபுரம் கிராம ஊராட்சியில் 10000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஓமலூர் ஊராட்சி ஒன் றிய நிர்வாக எல்லைக்கு உட்பட்ட தாத்தியம்பட்டி ஊராட்சியில் 5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரு கின்றனர். இந்நிலையில், தாத்தியம்பட்டி கிராம ஊராட்சி யில் புதியதாக மதுபான கடை மற்றும் பார்களை தொடங்குவ தற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரி கிறது. இப்பகுதியில் மதுபான கடை தொடங்கப்பட்டால், பள்ளி களுக்கு செல்லும் மாணவ மற்றும் மாணவிகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே காடையாம் பட்டி வட்டம் தாராபுரம் கிராமத்திலோ தாத்தியம்பட்டி கிராமத் திலோ மதுபான கடை மற்றும் பார் எதுவும் திறக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். குடிநீர் வசதி சேலம், காடையாம்பட்டி பண்ணப்பட்டி ஊராட்சியை சேர்ந்தோர் அளித்த மனுவில், எங்கள் ஊராட்சியில் 300 மேற் பட்ட குடும்பம் வாழ்ந்து வருகின்றார்கள். எங்கள் ஊருக்கு பொது கிணறு ஒன்று இருந்தது அது கிட்டத்தட்ட 8 மாதங் களுக்கு முன்பு இடிந்து விழுந்து விட்டது. ஆட்சியரிடம் மனு அளித்தோம். அவர் காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவ லர் அலுவலகம் அனுப்பி வைத்தனர் . அவர்கள் நேரில் வந்து கிணற்றை ஆய்வு செய்து சென்றார்கள் ஆனால் இன்று வரை இடிந்து விழுந்த கிணற்றை தூர்வாரி கட்டுவதற்கு உண்டான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்க ளுக்கு அப்பகுதியில் உள்ள கிணறுதான் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது நல்லது கெட்டது என்று எதுவாக இருந்தாலும், கோயில் திருவிழா மற்றும் திருவிழா காலங்களில் எங்களுக்கு தண்ணீர் பயன்பாட்டுக்கு இல்லா மல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். உடனடியாக கிணற்றை தூர்வாரி புதுப்பித்து தரவேண்டும் என மனு அளித்தனர்.