ஈரோடு புத்தகத் திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம்
ஈரோடு, ஜூலை 18- ஈரோடு புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோ சனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா வரும் ஆகஸ்ட் 1 முதல் 12 வரை சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறு கிறது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ச.கந்த சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சி யர் ச.கந்தசாமி தெரிவித்தாவது, ஈரோடு புத்தகத் திரு விழாவில் 230 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்த அரங்குகளாக அமையும். முற்பகல் 11 மணி முதல் இரவு 9.30 வரை கண்காட்சி நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் தலைசிறந்த சொற்பொழிவாளர்கள், அறிஞர்கள் கருத் துரை வழங்க உள்ளனர். இப்புத்தக திருவிழாவை சிறப்பாக நடத்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கி ணைந்து பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் முகம்மது குதுரத்துல்லா, மாவட்ட நூலக அலுவ லர் (பொ) சாமிநாதன், மக்கள் சிந்தனைப் பேரவை தலை வர் ஸ்டாலின் குணசேகரன் மற்றும் துறை சார்ந்த அலு வலர்கள் கலந்து கொண்டனர்.