tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமி மீது புகார்

பொள்ளாச்சி, செப்.27- காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கு.செல்வ பெருந்தகையை தரக்குறைவாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு வழக்கு பதிவு செய்யக்கோரி கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளரி டம் புகார் அளித்தனர். உதகையில் நடைபெற்ற அதிமுக பிரச்சார இயக் கத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வ பெருந்தகையை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவதூறாக பேசியதாக கூறப் படுகிறது. இதற்கு மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி யினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன்தொ டர்ச்சியாக, பொள்ளாச்சியில், டிஎஸ்பியிடம் எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய வேண் டும் என காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர். இதில், கோவை தெற்கு மாவட்ட  காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி.சக்திவேல் , இருகூர் சுப்பிரமணியம், வழக்கறி ஞர் பி. ரவி, நகரத் தலைவர் பி.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

“எம்எல்ஏ” காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வலியுறுத்தல்

கோவை, செப்.27- கோவை அருகே பழங்குடியினர் கிரா மத்தில் புகுந்த “எம்எல்ஏ” என்று அழைக் கப்படும் காட்டு யானையை வனப்பகு திக்குள் விரட்ட கிராம மக்கள் வலியுறுத்தி யுள்ளனர். கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில், கோவை குற்றாலம் அருகே உள்ள  சிங்கம்பதி பழங்குடியினர் கிராமம் உள் ளது. இந்த கிராமம் வனப்பகுதியில் உள்ள தால் வனத் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. கிராமத்திற்கு வெளி ஆட்கள், வெளி நபர்கள் செல்வதற்கு வனத்துறை யினரின் உரிய அனுமதி பெற வேண்டும். மேலும் அங்கு உள்ள மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் செல்வதற் காக காலை, மாலை என இரு வேலைகள் மட்டும் அரசு பேருந்து வசதி உள்ளது. இங்கு வனவிலங்குகள் சர்வசாதாரணமாக வந்து செல்வது வழக்கம்.  இந்நிலையில் அப்பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பழங்குடியினர் மலை கிராம மக்களால் “எம்எல்ஏ” என்ற காட்டு  யானை கடந்த இரண்டு தினங்களாக அங்கு  முகாமிட்டுள்ளது. இதனால் அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் வேலைக்கு செல் வோர் வெளியில் செல்வதற்கு அச்சப் பட்டு அந்த கிராமத்திலே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே வனத் துறையினர் அந்த காட்டு யானையை இப்பகு தியிலிருந்து விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த யானை எப்போதாவது ஒரு  நாள் இப்பகுதிப்பக்கம் வரும் என்பதால், இதற்கு ‘எம்எல்ஏ’ என பெயர் வைத்துள் ளது குறிப்பிடத்தக்கது.

ரயில் பெட்டியின் உதிரிபாகங்கள் திருடிய கும்பல் கைது

கோவை, செப்.27- ரயில்வே பாதுகாப்பு படையினர் நடத்திய  திடீர் சோதனையில் ரயில்வே பெட்டிகளில் பொருத்தப்படும் உதிரி பாகங்கள் மற்றும் இரும்பு பொருட்களை திருடிய ஏழு பேர் கொண்ட கும்பலை தென்னக ரயில்வே காவல் துறையினர் கைது செய்து, 745  கிலோ எடையிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை ரயில்வே யார்டில் உள்ள இன்டீ ரியர் ஓவர்ஹாலிங் ஷெட் அருகே, இரு வாக னங்களில் ரயில்வே கோச் உபகரணங்களை சட்ட விரோதமாக ஏற்றிக் கொண்டு இருந்த ஆறு பேரை ரயில்வே பாதுகாப்பு படையி னர் திடீர் சோதனையில் மடக்கிப் பிடித்த னர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை யில் இளங்கோவன், ராதாகிருஷ்ணன், கோகுல்பிரசாத், அருண்பாண்டி, ஜார்ஜ் புஷ், வெற்றிவேல் என்பது தெரிய வந்தது.  மேலும், இவர்கள் இரும்புப் பொருட்களை  கடத்தி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந் தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து  745 கிலோ எடையிலான ரயில்வே உபகர ணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கோவை மாவட்டம், சூலூரில் உள்ள முருகன் மெட்டல்ஸ் என்ற ஸ்கிராப் கடையில் விற் பனை செய்தது தெரியவந்தது.  அங்கு சென்ற ரயில்வே காவல் துறை யினர் சோதனை மேற்கொண்ட போது மேலும் 405 கிலோ ரயில்வே பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அந்தக் கடை யின் உரிமையாளர் பாலமுருகனையும் கைது  செய்தனர். மொத்தம் ரூ.42,000 மதிப்பிலான ரயில்வே சொத்துகள் மீட்கப்பட்டதாகவும், கோவை ரயில்வே காவல் நிலையத்தில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைதாகிய ஏழு பேரையும் கோவை குற்றவியல் நடு வர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.