அக்.9 ஆம் தேதி கோவை - அவிநாசி சாலை மேம்பாலம் திறப்பு
கோவை, செப்.14- அக்.9 தேதி முதல்வர் கோவைக்கு வருவதாக தகவல் பெறப்பட்டுள்ள நிலையில், அன் றைய தினமே கோவை – அவி நாசி சாலையில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் திறப்பதற்கு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளதாக அமைச் சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கோவை - அவிநாசி சாலையில் கட்டுப்பட்டு வரும் உயர்மட்ட மேம் பாலப் பணிகள், காந்திபுரம் பகுதி யில் நடைபெற்று வரும் பெரியார் நூலகம் அறிவுசார் மையம் கட்டு மான பணிகளை தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஞாயிறன்று நேரில் ஆய்வு செய் தார். இந்த ஆய்வின் போது பொதுப் பணித்துறை கூடுதல் தலைமைச் செயலர் மங்கத் ராம் சர்மா, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப் பனவர், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், நெடுஞ் சாலைத்துறை சிறப்பு அலுவலர் சந்திரசேகர், தலைமை பொறியா ளர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதன்பின் செய்தியாளர்களி டம் அமைச்சர் பேசுகையில், பொங் கல் பண்டிகைக்கு முன்பு பெரியார் நூலகத்தை திறக்க வேண்டும் என முதலமைச்சர் ஆணையிட்டுள் ளார். எந்த தேதியில் திறக்கலாம் என்று முதல்வர் இசைவு தரு கிறாரோ, அப்போது முதல்வரால் திறக்கப்படும். மேலும், அவிநாசி சாலையில் கட்டப்பட்டு வரும் உயர் மட்ட மேம்பாலம் நான்காண்டுக ளில் கட்டி முடித்திருக்க வேண்டும். ஆனால், ஒன்பது மாத காலம் தாம தம் ஆகிவிட்டது. அதற்கு காரணம் பல்வேறு சிப்டிங் பணிகள், மின் சார இணைப்புகள், நில எடுப்பு பணிகள் ஆகியவை தான். ரூ.1,791 கோடி திட்ட மதிப்பில் கட்டப்பட்டும் வரும் இப்பாலத்தில், விமான நிலையம், ஹோப் காலேஜ், நவ இந்தியா மற்றும் அண்ணா சிலை ஆகிய நான்கு இடங்களில் ஏறுபா லம், இறங்கு பாலம் அமைக்கப்ப டும். அதனால் போக்குவரத்து எளி தாகும். அடுத்த மாதம் முதலமைச் சர் கோவைக்கு வருகை தர உள்ள நிலையில், அப்பொழுது அந்த பாலத்தை திறந்து வைக்க வேண் டும் என்ற அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த மாத இறுதிக் குள் 100 சதவிகித பணிகளை முடித்து விடுவோம் என்று ஒப் பந்ததாரர் கூறினர். முதல்வர் மு.க. ஸ்டாலின் அக்டோபர் 9 தேதி கோவைக்கு வருவதாக தகவல் பெறப்பட்டுள்ள நிலையில், அன் றைய தினமே பாலத்தை திறப்ப தற்கு ஏற்பாடு செய்வோம், என் றார். மேலும், இந்த மேம்பாலம் கட்டு வதற்கு கால தாமதம் ஆக முக்கிய காரணம், ரயில்வே துறை தான். ரயில்வே அதிகாரிகளிடம் பேசி பொறியியளார்களை வைத்து ஒப் புதல் அளித்த பிறகு தான், ரயில்வே பகுதியில் பாலங்கள் கட் டப்படும், என்றார். மேம்பாலத்தில், தனியார் ஹோட்டல் அருகே தூண் வருவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. தனியார் ஹோட்டலுக்கும், எங்க ளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதனை சந்தித்து தான் வருகி றோம். அதுகுறித்து நீதிமன்றத்தில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக எல்லாம் இந்த பாலம் திறப்பு தடையாகாது. அந்த வழக்கு முடியும் போது அங்கு இறங்கு பாலத்தை, அதற்கு ஏற்ப அமைத்துக் கொள்வோம், என் றார்.
