tamilnadu

img

நெரிசலை தவிர்க்க கூடுதல் பெட்டிகள் ரயில்வே மேலாளரிடம் சிஐடியு வலியுறுத்தல்

நெரிசலை தவிர்க்க கூடுதல் பெட்டிகள்  ரயில்வே மேலாளரிடம் சிஐடியு வலியுறுத்தல்

மேட்டுப்பாளையம், ஜூலை 13- பயணிகள் கூட்ட நெரிச லில் சிக்கித்தவிப்பதை கருத் தில் கொண்டு, கூடுதல் பெட் டிகள் இணைக்க வேண்டும் என ரயில்வே கோட்ட மேலா ளரிடம் சிஐடியு பொதுத்  தொழிலாளர் சங்கத்தினர்  கோரிக்கை மனு அளித்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் சேலம் ரயில்வே கோட்ட  மேலாளர் ஸ்ரீபன்னா லால் சனியன்று ஆய்வு  மேற்கொண்டார். அப்போது அவரிடம் சிஐ டியு பொதுத் தொழிலாளர் சங்க தாலுகா பொதுச் செயலாளர் பாஷா உள்ளிட்ட பலர்  கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில், மேட்டுப்பாளையம் - கோவை இடையே யான பயணிகள் ரயில் சேவையினை தினமும்  ஏழு முறை இயக்க வேண்டும். கூட்ட நெரி சலை தவிர்க்க கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும். மேட்டுப்பாளையத்தில் இருந்து  திருநெல்வேலி, தூத்துக்குடி சேவையினை தினசரி ரயில் சேவையாக மாற்ற வேண் டும். கோவையிலிருந்து அதிகாலை 6:00 மணிக்கு இயக்கும் மங்களூர் ரயிலை மேட் டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து இயக்க வேண்டும். மேற்கு பகுதியை இணைக்கும் வகையில் பாரதிநகர் பகுதி யில் மேம்பாலம் அமைக்க வேண்டும். அம்ரித்  பாரத் திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை  முறையாக பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். முன்னதாக நடைபெற்ற இந்த ஆய்வின் போது, ரயில்வே துறை அலுவலர்கள், பொறி யாளர்கள், மேட்டுப்பாளையம் ரயில் நிலைய  மேலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ரயில்வே  காவல்துறையினர் உடனிருந்தனர்.