போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர் போராட்டம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண சிஐடியு வலியுறுத்தல்
ஈரோடு, ஆக.31- இரண்டு வாரங்களாக காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக் கும் போக்குவரத்து ஊழியர்களி டம், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண் டும் என சிஐடியு ஈரோடு மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. இந்திய தொழிற்சங்க மையத் தின் (சிஐடியு) ஈரோடு மாவட்ட 12 ஆவது மாநாடு சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், ஈரோடு நகர ஆயிர வைசியர் திருமண மண்டபத்தில், தோழர்கள் சீத்தாராம் யெச்சூரி, வி. எஸ்.அச்சுதானந்தன் ஆகியோர் நினைவரங்கில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணி யன் தலைமை வகித்தார். பிரதிநிதி கள் மாநாட்டில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன் துவக்க வுரையாற்றினார். மாவட்டச் செய லாளர் எச்.ஸ்ரீராம், பொருளாளர் கே. கே.செந்தில்குமார் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.எம்.முனுசாமி வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில், போக்குவ ரத்து ஓய்வூதியர்களுக்கு 25 மாத அகவிலைப்படி உயர்வு, பணி யிலுள்ள தொழிலாளர்களுக்கு ஒப் பந்த பலன்கள், பின்னீட்டு ஊதி யம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு வாரங்களாக தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள் ளன. இவற்றில் பணியாற்றும் 1.50 லட்சம் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட திட்டங் கள் முழுமையாக அமலாக்கப்படு வதில்லை. எனவே, தொழிற் சாலை, தொழிலாளர் அமுலாக்க பிரிவினர் சட்ட அமலாக்கத்தை உறுதி செய்ய வேண்டும். படுக்கை வசதியுடன் கூடிய பல்நோக்கு இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க வேண்டும். குறைந்த பட்ச ஊதிய சட்டப்படி ஊரக, நகர்ப் புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மைப் பணியா ளர்களுக்கு ஊதியம் வழங்க வேண் டும். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தொழிலாளர் நீதிமன் றம் நடத்த இடம் ஒதுக்க வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் பாலியல் புகார் கமிட்டிகளை அமைக்க வேண்டும். சொந்த வீடில் லாத பீடி தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சிஐடியு ஈரோடு மாவட்டத் தலைவராக எஸ். சுப்ரமணியன், செயலாளராக கே. மாரப்பன், பொருளாளராக வி. சுரேஷ்பாபு, துணைத்தலைவர்க ளாக எச்.ஸ்ரீராம், என்.முருகையா, பி.குணசேகரன், பி.கனகராஜ், வி. பாண்டியன், ஆர்.நடராஜ், துணைச் செயலாளர்களாக சி.ஜோதிமணி, பி.ஸ்ரீதேவி, கே.பிஜு, ஆர்.செந்தில் குமார், பி.பிரபு, எஸ்.ஜெகநாதன் உட்பட 35 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. சிஐ டியு மாநில துணைத்தலைவர் டி. உதயகுமார் நிறைவுரையாற்றி னார். ஆர்.செந்தில்குமார் நன்றி கூறினார்.