tamilnadu

img

போராடும் உள்ளாட்சி ஊழியர்களுக்கு ஆதரவாக சிஐடியு ஆர்ப்பாட்டம்

போராடும் உள்ளாட்சி ஊழியர்களுக்கு ஆதரவாக சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 2- சட்டப்படி வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்கக்கோரி காத் திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டு வரும் உள்ளாட்சி ஊழியர் களுக்கு ஆதரவாக திருப்பூரில் சிஐ டியு-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் குடிநீர் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும்  ஓட்டுநர்கள் ஒப்பந்த அடிப்படை யில் வேலை செய்து வருகின்ற னர். இவர்களுக்கு மாவட்ட ஆட்சி யர் நிர்ணயித்ததை வழங்காமல் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் ஊதியத்தை குறைத்து வழங்கி வருகின்றனர். இதுகுறித்து சிஐ டியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதில் உள்ளாட்சி ஊழியர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும் சுமார் இரண்டு ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவை அமலாக்காமல் நியாய மான சட்ட கூலியை வழங்காமல் உள்ளனர். எனவே திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட் சித்துறை ஊழியர் சங்கத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கடந்த மூன்று நாட்க ளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட  ஆட்சியர் தீர்வு காண முயற்சிப்ப தாக கூறினாலும் அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்ததாக தெரி யவில்லை. இந்த நிலையில் உள் ளாட்சி ஊழியர்கள் சங்கத்தின் போராட்டம் உறுதியான நிலையில் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், போராடும் உள் ளாட்சி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அரசு நிர்வாகம் உட னடியாக தலையிட்டு உள்ளாட்சி ஊழியர்களுக்கு சட்டப்படி நியாய மான ஊதியம் வழங்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என வலியு றுத்தி, சிஐடியுவினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் குமரன் நினைவகம் முன் பாக நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.சம்பத் தலைமை ஏற் றார். சிஐடியு கட்டுமானத் தொழி லாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.குமார், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் கே. உன்னிகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர். இதில் திரளா னோர் கலந்து கொண்டனர்.