tamilnadu

img

அமெரிக்காவின் வரி திணிப்பிற்கு சிஐடியு எதிர்ப்பு

அமெரிக்காவின் வரி திணிப்பிற்கு சிஐடியு எதிர்ப்பு

திருப்பூர், ஆக.10- ஆயத்த ஆடைகளுக்கு அமெ ரிக்க அரசு விதித்த அதீத வரியை திரும் பப்பெற ஒன்றிய அரசு உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என சிஐ டியு திருப்பூர் மாவட்ட மாநாட்டில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) திருப்பூர் மாவட்ட 14 ஆவது  மாநாடு, திருப்பூர் மாநகரில் ஞாயி றன்று துவங்கியது. முன்னதாக, மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து  மாநாட்டு கொடிமரம், கொடி, தியாகிகள்  நினைவு ஜோதி ஆகியவை திருப்பூர் தியாகி குமரன் நினைவகம் முன்பாக கொண்டு வந்து சேர்க்கப்பட்டன. அங்கி ருந்து மாநாட்டு பிரதிநிதிகள் உள்ளிட்ட  தொழிலாளர் பேரணி தொடங்கியது. சிஐடியு அகில இந்திய துணைத்தலை வர் ஏ.கே.பத்மநாபன் செங்கொடியை அசைத்து பேரணியை தொடக்கி வைத் தார். தியாகி குமரன் நினைவகத்திலி ருந்து துவங்கிய பேரணி டவுன்ஹால், குமரன் சாலை, நொய்யல் பாலம், மாந கராட்சி சந்திப்பு, மங்களம் சாலை, ஜம் மனை வழியாக சென்று, காமாட்சி அம் மன் திருமண மண்டபத்தில் நிறைவ டைந்தது. அங்கு தோழர் அச்சுதானந்தன் நினைவரங்கம் முன்பு கொடிமரம், கொடி, தியாகிகள் நினைவு ஜோதி பெற் றுக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற் றது. இதைத்தொடர்ந்து மாநாட்டு கொடியை சிஐடியு விசைத்தறி தொழி லாளர் சம்மேளன மாநிலத் தலைவர் பி. முத்துசாமி ஏற்றி வைத்தார். தோழர் சங் கரய்யா நினைவரங்கத்தில் நடைபெற்ற  பொது மாநாட்டிற்கு சிஐடியு மாவட் டத் தலைவர் ஜி.சம்பத் தலைமை வகித் தார். துணைச்செயலாளர் பி.செல்ல துரை அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். வரவேற்புக்குழு செயலாளர் பி. பாலன் வரவேற்றார். சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்ம நாபன் மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றினார். இந்த பொது மாநாட்டில், அமெ ரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன்னிச் சையாக அறிவித்துள்ள 50 சதவிகித வரி  உயர்வை கண்டித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. திருப்பூர் மாநகரம் சர்வ தேச அளவில் ஆயத்த ஆடை உற்பத்தி  மற்றும் ஏற்றுமதியில் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக திகழ்கிறது. கடந் தாண்டு 44 ஆயிரம் கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சரிபாதி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் ஏறத்தாழ 35 சதம் திருப்பூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் அரசியல் பின்னணியில் டிரம்ப் அறிவித் துள்ள, ஆக.1 முதல் 50 சதவிகித அபராத  வரியுடன் சேர்த்து 66.90 என்று இறக்கு மதி வரி செலுத்த வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் குளிர்  கால ஆடைகளுக்கான ஆர்டர்களை அமெரிக்க வர்த்தகர்கள் தவிர்த்து வரு கின்றனர். இதனால் அடுத்த மூன்று  மாதங்களில் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.  அமெரிக்க அரசின் இந்த அநியாய  வரி விதிப்பால் இந்திய நாட்டின் ஜவுளித் தொழில் மற்றும் ஆயத்த ஆடைகள் உற் பத்தியும் வர்த்தகமும் பெரிதும் பாதிப் புக்குள்ளாகும். இத்தொழிலில் ஈடுபட் டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலா ளர்கள் மற்றும் சிறு, குறு தொழில்  முனைவோர் எண்ணற்ற துயரங்களுக் குள் தள்ளப்படுவார்கள். எனவே, ஒன் றிய அரசு உடனடியாக தொழிலாளர் களையும், தொழில்களையும் பாதுகாக் கின்ற வகையில் போர்கால அடிப்படை யில் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்நாட்டு சந்தையை விரிவுபடுத்த வேண்டும். மக்களின் வாங்கும் சக் தியை அதிகரிக்கும் வகையில் நடவ டிக்கைகளை எடுக்க வேண்டும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிற்பகல் பிரதி நிதிகள் மாநாடு தொடங்கியது. மாவட் டச் செயலாளர் கே.ரங்கராஜ், பொருளா ளர் ஜெ.கந்தசாமி ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். திங்களன்றும் மாநாடு நடைபெறுகிறது.