tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க சிஐடியு கோரிக்கை

உடுமலை, அக்.11- உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகா பகுதியில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சட்டப்ப டியான போனஸ் வழங்க வேண்டும் என உடுமலை தாலுகா  பொது தொழிலாளர் சங்கம் சிஐடியு கோரிக்கை வைத்துள் ளது. உடுமலை சிஐடியு அலுவலகத்தில் சனியன்று சிஐடியு பொது தொழிலாளர் சங்க கூட்டம் தலைவர் ரங்கநாதன் தலை மையில் நடைபெற்றது. இதில், தீபாவளி பண்டிகை இன்னும்  ஒரு சில நாட்களில் வர இருப்பதால், உடனடியாக உடுமலை  மற்றும் மடத்துக்குளம் தாலுகா பகுதியில் செயல்படும் பனி யன் நிறுவனங்கள், கோழிப்பண்ணைகள், காற்றாலை நிறு வனங்கள், தனியார் நிறுவனங்கள், ஒப்பந்த நிறுவனங்கள், கடைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவ மனை ஊழியர்கள், என அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு  அனைத்து தொழிலாளர்களுக்கும் உடனடியாக 8.33 சதவீ தத்தை விட கூடுதலாக போனஸ் வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் போனஸ் தருவதை  உறுதி செய்யும் வகையில் தமிழக அரசும், தொழிலாளர்  துறையும் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு, தொழிலாளர்க ளுக்கு போனஸ் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என  கேட்டுக் கொண்டுள்ளனர். இதில், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் உண்ணிகி ருஷ்ணன், தாலுகா செயலாளர் ஜெகதீசன், பொருளாளர் ஜோசப் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தில் ரூ. 86 கோடி கடன் வழங்க இலக்கு

திருப்பூர், அக்.11- வேளாண்மை  தொடர்பான உட்கட்டமைப்புகளை மேம்ப டுத்த ஒன்றிய அரசு வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியை  உருவாக்கியுள்ளது. இந்த நிதிதிட்டத்தின் கீழ் பிணையமற்ற குறைந்த வட்டியிலான கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. திருப் பூர் மாவட்டத்திற்கு 2025-2026  நிதியாண்டிற்கு ரூ.86  கோடி  கடன் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைப்ப டுத்துவதற்கு தேவையான மின் சந்தையுடன் கூடிய விநி யோக தொடர் சேவை, சேமிப்புக்கிடங்குகள், சேமிப்பு கலன் கள்  சிப்பம் கட்டும் கூடங்கள், விளைப்பொருட்களை மதிப்பிடு வதற்கான அமைப்புகள், தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்து வதற்கான இயந்திரங்கள், குளிர்பதன வசதிகள், போக்கு வரத்து தளவாட வசதிகள், பழங்களை அறிவியல் ரீதியாக  பழுக்க வைக்கும் அறைகள் மற்றும் முதன்மை பதப்படுத்தும்  மையங்கள் போன்ற கட்டுமான வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக இத்திட்டத்தின்கீழ் கடனுதவி வங்கி மூலம்  வழங்கப்படவுள்ளது. மேலும், வட்டியில் 3 சதவீதம் சலுகை  வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையிலான  கடனுக்கு ஏழு ஆண்டு காலத்திற்கு, ஆண்டிற்கு 3 சதவீதன்  வட்டி குறைப்பு வழங்கப்படுகிறது. ரூ.2 கோடிக்கு மேற்பட்ட  கடனாக இருந்தால், ரூ.2 கோடி வரையிலான தொகைக்கு  மட்டும் 3 சதவீதம் வட்டி குறைப்பு கட்டுபடுத்தப்பட்டு வழங்கப் படுகிறது. ரூ.2 கோடி வரை உள்ள கடன்களுக்கான கடன் உத்தி ரவாதமும் வழங்கப்படுகிறது. இத்திட்டதின் கீழ் பயடைய   https://agriinfra.dac.gov.in என்ற இணைய  முகவரியில்  விரிவான திட்ட அறிக்கையுடன் தாங்கள்  விரும்பும் வங்கி   கிளைக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல்  விபரங்களுக்கு  ddab.tiruppur@gmail.com என்ற இ மெயில் அல்லது வேளாண்மை துணை  இயக்குநர், (வேளாண் வணிகம்), திருப்பூர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு  மாவட்ட ஆட்சியர் மனிஷ்நாரணவரே தெரிவித்துள்ளார்.

கைத்தறி நெசவாளர்களுக்கு நெசவுக்கூலியில்  ’8.33% போனஸ் வழங்க சிஐடியு கோரிக்கை

திருப்பூர், அக். 11- திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவா ளர்களுக்கு அவர்கள் நெசவு செய்து பெற்ற கூலியில் 8.33 சதவீதம் போனஸ்  வழங்க திருப்பூர் மாவட்ட கைத்தறி நெச வாளர் சங்கம் சிஐடியு கோரியுள்ளது.  திருப்பூர் மாவட்டத்தில் 30 ஆயிரத் துக்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கள் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் கள். தற்சமயம் நெசவு செய்கின்ற அள விற்கு பாவு நூல், ஊடு நூல் ஜவுளி உற் பத்தியாளர்களால் வழங்கப்படுவ தில்லை.  ஒன்றிய அரசால் ஜிஎஸ்டி வரி  குறைப்பு அறிவிக்கப்பட்ட பிறகு,  ஜரிகை விலை சிறிது குறைந்துள்ளது. ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைக்கப்பட்ட கூலியை உயர்த்த வில்லை.  தற்சமயம் கோவை மாவட்டம் சிறு முகையில் தமிழக அரசால் துவக்கி  வைக்கப்பட்ட கைத்தறி பூங்காவில் நெசவு செய்யும் தொழிலாளிக்கு ரூ.800  தினக்கூலி கிடைக்கிறது, என்று கைத்த றித் துறை அமைச்சர் கூறியதாக பத்தி ரிகை செய்தி வந்துள்ளது. ரூ. 26 ஆயி ரம் குறைந்தபட்ச கூலி வேண்டும் என்று  கேட்கும் சமயத்தில் ரூ.18000 கூலி போது மானது இல்லை. மேலும் ஒருவரே நெசவு நெய்து கூலி பெற முடியாது. குடும்பத்தினர் முழுவதும் உதவி செய்ய வேண்டும். நெய்வதற்குத் தேவையான தார் குச்சி தயார் செய்ய  வேண்டும். இந்நிலையில் தீபாவளி பண் டிகை வருகிறது. கைத்தறி நெசவாளர் கள் பெற்ற கூலியில் 8.33 சதவிகிதம்  போனஸ் கைத்தறி ஜவுளி உற்பத்தியா ளர் வழங்குவதை மாவட்ட நிர்வாகம், உறுதி செய்ய வேண்டும். கூட்டுறவு சங் கங்களில் பேரவை நடத்தி போனஸ் வழங்குவதை கைத்தறி துணி நூல்  உதவி இயக்குனர் உறுதி செய்ய வேண் டும். இது குறித்து கைத்தறி நெசவாளர் சங்கத்துடன் உரிய முறையில் பேச்சு வார்த்தை நடத்தி, கைத்தறி நெசவா ளர்களுக்கு போனஸ் கிடைக்க செய்ய  வேண்டுமாய் கைத்தறி துறை உதவி  இயக்குனரை கேட்டுக் கொள்வதாக வும்,  மேலும் சேலைக்கு ரூ.10 அல்லது  ரூ.15 என்ற முறையை முற்றாக தவிர்த்து,  நெசவாளர்கள் நெய்து பெற்ற கூலியில்  8.33% என்பதை உறுதிப்படுத்த வேண் டும். மாவட்ட நிர்வாகமும், தமிழக அர சும் முன்வர வேண்டும் என திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்க சிஐ டியு செயலாளர் என்.கனகராஜ்  கேட்டுக்  கொண்டுள்ளார்.