முதல்வர் ஸ்டாலின் தருமபுரி வருகை
தருமபுரி, ஆக.13- தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆக.16,17 ஆகிய தேதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தருமபுரிக்கு வர வுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தரும புரி மாவட்டத்தில் ஆக.16, 17 தேதிகளில் நடைபெறவுள்ள அரசு விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். எனவே, பாதுகாப்புக்கருதி அந்நாட்களில் தருமபுரி மாவட்டப் பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவு
பொள்ளாச்சி, ஆக.13- பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் தற்போது கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பொள்ளாச்சியில் வாகனப் பெருக்கம், நகரின் வளர்ச்சி அதிகரித்துள்ள நிலையில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க கூடுதலாக பேருந்து நிலையம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்கென ரூ.7 கோடியே 7 லட்சம் செலவில் பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள சி.டி.சி.மேடு பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் தற்போது 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. தார்ச்சாலை அமைப்பது மற்றும் மின்விளக்குகள் பொருத்துவது ஆகிய பணிகள் மீத முள்ள நிலையில் விரைவில் திறக்கப்பட உள்ள புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பொள்ளாச்சி நக ராட்சி ஆணையாளர் கணேசன் ஆய்வு செய்து அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவு றுத்தினார். பின்னர் புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள 64 கடைகள் ஏலம் விடுவதற்கான ஆலோசனை கூட்டம் புத னன்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பேருந்து நிலையத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் பேருந்து நிலையத்திற்குள் வரும் பேருந்துகளுக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்யும் ஒப்பந்தம், கட்டணக் கழிப்பிட பரா மரிப்பு, பொருள் வைப்பு அறை, உள்ளிட்ட பணிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஏலம் விடுவது சம்பந்தமாக நடை பெற்ற ஆலோசனை கூட்டத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, நகர்மன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் கணேசன் மற்றும் நகராட்சி அதிகாரிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள் உள்ளிட் டோர் இதில் பங்கேற்றனர்.
இன்று மின்தடை
நாமக்கல், ஆக.13- நாமக்கல் மாவட்டம், பர மத்திவேலூர் வட்டம், வில்லி பாளையம் துணை மின் நிலையத்தில் வியாழனன்று (இன்று) மாதாந்திர பார மரிப்புப் பணிகள் நடைபெற வுள்ளது. இதனால் வில்லி பாளையம், ஜங்கமநாயக் கன்பட்டி, சின்னமநாயக்கன் பட்டி, சுங்ககாரன்பட்டி, தம்ம காளிபாளையம், பில்லூர், கூடச்சேரி, அர்த்தனாரி பாளையம், மாவுரெட்டி, ஓவி யம்பாளையம், தேவிபாளை யம், கீழக்கடை, கஜேந்திர நகர், சுண்டக்காபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வியா ழனன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநி யோகம் இருக்காதென தெரி விக்கப்பட்டுள்ளது.
புராதான சின்னங்களை பாதுகாக்க வலியுறுத்தல்
தருமபுரி, ஆக.13- தருமபுரி மாவட்டத்திலுள்ள புராதான சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என அதியமான் வரலாற்று சங்கம் வலியுறுத்தியுள்ளது. தகடூர் அதியமான் வரலாற்றுச் சங்கத்தின் 6 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் செவ்வாயன்று, சங்கத்தின் அலுவலத் தில் தலைவர் தி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற் றது. செயலாளர் இரா.செந்தில் வரவேற்றார். இக்கூட்டத்தில், திருமல்வாடியில் உள்ள குத்துக்கல், கம்பைநல்லூர் வெத ரம்பட்டி என்ற ஊரில் உள்ள ஏழுசுத்துக் கோட்டை, தென்க ரைக் கோட்டை மதில், அகழி, ஆயுதக்கிடங்கு, கோயில்கள் ஆகியவற்றை பாதுகாகப்பட்ட சின்னங்களாக அறிவிக்க வேண்டும். இரும்பு குறித்து கருத்தரங்கம் நடத்துவது; தகடூர் பகுதி அகழாய்வுகள் குறித்து கருத்தரங்கம் நடத்துவது; காஞ்சி மாநகரை மையப்படுத்தி தொல்லியல் சுற்றுலா நடத்து வது; 7 ஆவது தருமபுரி புத்தகத் திருவிழாவில் சங்கத்தின் சார்பில் பங்கெடுத்து மாலை நேர கருத்தரங்கு நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், பொருளாளர் வெ.ராஜன் நன்றி கூறினார்.
மயானத்திற்கு செல்ல சாலை கேட்டு மனு
தருமபுரி, ஆக.13- பாலவாடி கிராமத்திலுள்ள மயானத்திற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷிடம் மனு அளித் தனர். இதுதொடர்பாக அம்மனுவில், பென்னாகரம் வட்டம், பாலவாடி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திலுள்ள மயா னத்திற்கு செல்லும் சாலை, இதுவரை மண் சாலையா கவே உள்ளது. மழைகாலங்களில் செல்லும் போது, சேறும், சகதியுமாக மாறிவிடுவதால், சாலையில் பொதுமக்கள் நடந்து செல்லும் போது வழுக்கி விழும் நிலையுள்ளது. இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு எடுத்து செல்வதில் மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் மழைக் காலங்களில் மயானத்திற்கு ஈமகாரியங்கள் செய்வதற்காக செல்லும் முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு போன்ற நோய்கள் பர வும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக பொதுமக்கள் நலன் கருதி பாலவாடி மயானத்திற்கு செல்லும் மண் சாலையை தார்சாலையாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.