மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் விலை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு வியாழனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணைத்தலைவர் கே.பூபதி தலைமை வகித்தார். இதில் மாவட்டத் தலைவர் ஏ.ஆதிநாராயணன், துணைத்தலைவர்கள் என்.ஜோதி, ஆர்.வேலாயுதம், இடைக்கமிட்டி தலைவர்கள், சிபிஎம் நகரச் செயலாளர் எஸ்.சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
