tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

பணம் கேட்டு மிரட்டிய இந்து மகாசபையினர்  மூவர் மீது வழக்குப் பதிவு

திருப்பூர், ஆக. 30 - திருப்பூரில் விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்க வேண் டும் என்று தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய இந்து  மகாசபை அமைப்பினர் மூவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருப்பூர் சாமுண்டிபுரம் அருகே லட்சுமி தியேட்டர் சாலை  திருமலை நகரைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (49). இவர் கடந்த  வியாழக்கிழமை அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந் தார். அப்போது இந்து மகாசபை அமைப்பைச் சேர்ந்த பாலா,  சுதாகர், ஆல்பர்ட் ஆகியோர் குடி போதையில் அவரிடம் விநா யகர் சதுர்த்திக்கு சிலை வைக்க வேண்டும் என்று சொல்லி  பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் ரஞ்சித் குமார்  15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இந்த புகாரின் பேரில் பாலா (28), சுதாகர் (47) மற்றும் ஆல்பர்ட்  (32) ஆகிய மூவர் மீதும் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அரசு ஊழியர் சங்க அவிநாசி வட்டக்கிளை பேரவை

அவிநாசி,ஆக.30 - அவிநாசி அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை பேரவை கிராம  நிர்வாக அலுவலக கட்டிடத்தில் வட்டக்கிளை தலைவர் சின் ராசு தலைமையில் நடைபெற்றது. செயலாளர் கருப்பன்  அறிக்கை வைத்தார். ஓய்வூதியர் சங்க வட்டக்கிளை தலைவர்  கோபாலகிருஷ்ணன், சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்  தலைவர் ஈஸ்வரமூர்த்தி   வாழ்த்திப் பேசினர். மாவட்டத் தலை வர் பாண்டியம்மாள் சிறப்புரையாற்றினார். வட்டக்கிளை புதிய நிர்வாகிகளாக, தலைவர் சின்ராசு, செயலாளர் கருப் பன், பொருளாளர் கண்ணன் உட்பட 8 பேர் கொண்ட கமிட்டி  அமைக்கப்பட்டது.

ரயில் தண்டவாளத்தில் தடுமாறி விழுந்த  பெண்ணை சாதுர்யமாக காப்பற்றிய பெண் காவலர்

திருப்பூர், ஆக.30- திருப்பூர் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் புறப்பட்ட போது, கீழே இறங்க முயன்ற பெண் தடுமாறி நடைமேடைக் கும், ரயிலுக்கும் இடையே விழுந்தார். அப்போது அங்கு பணி யில் இருந்த பெண் காவலர் சாதுர்யமாக செயல்பட்டு அறி வுரை வழங்கி அவரைக் காப்பாற்றினார்.  திருப்பூர் ரயில் நிலையத்துக்கு வெள்ளியன்று அதிகாலை  மன்னார்குடியில் இருந்து கோவை நோக்கி செல்லும் ரயில்  வந்தது. ரயில் 1 ஆம் நடைமேடையில் நின்று விடடு, புறப்பட்ட போது, திருப்பூரை சேர்ந்த சுசிலா (58) தனது பேத்தியுடன் ஓடும்  ரயிலில் இருந்து இறங்க முயன்றார். அப்போது நிலை தடு மாறி, நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் இருந்த இடைவெளியில் விழுந்துவிட்டார். இதை பார்த்த அங்கு  பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் திவ்யா,  அந்த இடத்திற்கு விரைந்து வந்து, கீழே விழுந்து கிடந்த  பெண் பயணியிடம் ரயில் ஓடும் நிலையில், எந்த அசைவும்  இல்லாமல் அப்படியே படுத்திருக்கும்படி அறிவுறுத்தினார். மேலும், பயணியுடன் பேசிக் கொண்டே இருந்ததுடன், அசை யாமல் இருக்க வழிகாட்டினார். இதற்குள்ளாக பயணி ஒருவர்  சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினார்.  உடனடியாக அங்கி ருந்த  ரயில்வே பாதுகாப்பு படை  காவலர்கள், பெண் பய ணியை லாவகமாக வெளியே மீட்டனர். சாதுர்யமாக செயல் பட்டு பெண் பயணியைக் காப்பாற்றிய பெண் காவலர் திவ்யா வின் செயலை சக காவலர்களும், ரயில் பயணிகளும் பாராட் டினர்.

விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு நாளை ஐந்து இடங்களில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

அவிநாசி, ஆக.30- விசைத்தறி உரிமையாளர் சங்கங்களை யும், தொழிற்சங்கங்களையும், அரசு நேரில்  அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, தொழி லாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தத்தை ஏற் படுத்த வலியுறுத்தி செப்.1 ஆம் தேதி திருப்பூர்  மாவட்டத்தில் 5 இடங்களில் சிஐடியு விசைத் தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். விசைத்தறி தொழிலாளர்களுக்கு நிறுத்தி  வைக்கப்பட்டுள்ள குழுக் காப்பீடு திட் டத்தை மீண்டும் தொடங்க வேண்டும்.  விசைத்தறி உரிமையாளர் சங்கங்களையும், தொழிற்சங்கங்களையும், அரசு நிர்வாகம் நேரில் அழைத்து பேசி கூலி உயர்வு ஒப்பந் தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களுக்கு 12 மணி நேர  வேலையை 8 மணி நேரமாக மாற்றி அமைக்க  வேண்டும். அனைத்து விசைத்தறி தொழிலா ளர்களுக்கு இஎஸ்ஐ, இபிஎப் சலுகை ஏற்ப டுத்தி தர வேண்டும். அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா, இலவசமாக வீடு கட்டித் தர வேண்டும். மக் கள் பிரச்சனையை பின்னுக்கு தள்ளி, வகுப்பு வாத இந்துத்துவா சக்திகளை அம்பலப்ப டுத்தி, மக்கள் ஒற்றுமையை பலப்படுத்த தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்ப டுத்த வேண்டும். விசைத்தறி தொழி லாளர்களுக்கு நலவாரிய பயன்கள் தடை யில்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண் டும். கந்து வட்டிக் கொடுமையால் தற் கொலை செய்து கொள்ளும் நிலையை தடுக்க, கந்து வட்டிக்கு எதிரான சட்டத்தை  அமல்படுத்த வேண்டும் கிட்னி விற்பனையை  சமூகப் பிரச்சினையாக கருதி, கிட்னி ஏஜென்ட்களை உடனடியாக கைது செய்ய  வேண்டும். மேலும், கிட்னி விற்பனையை  தடுத்து நிறுத்தி, கிட்னி கொடுத்தவர்களுக்கு மருத்துவ உதவி, மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திருப்பூர் மாவட்டத்தில், வஞ் சிபாளையம் பேருந்து நிறுத்தம், மங்கலம், கருணைபாளையம் பிரிவு, பல்லடம், இடு வாய் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் செப்டம்பர் 1 ஆம் தேதி ஆர்ப்பாட் டம் நடத்துவது என சிஐடியு விசைத்தறி தொழி லாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.