சிஐடியு மாநாட்டை முன்னிட்டு ரத்ததான முகாம்
சேலம், ஜூலை 20- சிஐடியு சேலம் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு, ஞாயி றன்று வி.பி.சிந்தன் நினைவு ரத்ததான முகாம் நடைபெற் றது. இந்திய தொழிற்சங்க மையத்தின் சேலம் மாவட்ட 14 ஆவது மாநாடு ஆக.23, 24 ஆம் தேதிகளில் நடைபெற வுள்ளது. இந்நிலையில், மாநாட்டை முன்னிட்டு, தொழி லாளி வர்க்கத்தின் ஒப்பற்ற போராளி வி.பி.சிந்தன் நினைவு ரத்ததான முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. சிஐடியு மாவட் டக்குழு அலுவலகத்தில் சேலம் அரசு மோகன் குமாரமங் கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்ற இம்முகாமிற்கு, சிஐடியு சாலை போக்கு வரத்து சம்மேளன மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாக ராஜன் தலைமை வகித்தார். இதில் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி அலுவலர் ரவீந்தி ரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, பி.விஜயலட்சுமி, மாவட்ட நிர்வாகிகள் பி.பன்னீர்செல்வம், பி.முருகேசன், சி. கருப்பண்ணன், கே.பி.சுரேஷ்குமார், ஆர்.கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் அளித்தனர்