tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

மதக்கலவரத்தை தூண்ட முயற்சி பாஜக நிர்வாகி சிறையில் அடைப்பு

நாமக்கல், ஜூலை 2- சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகளை பரப்பி, கல வரத்தை தூண்ட முயற்சித்த பாஜக நிர்வாகியை காவல் துறை யினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், முத்துகாளிப்பட்டி யைச் சேர்ந்தவர் பிரவீன்ராஜ் (30). இவர் பாஜக இளைஞர்  பிரிவு, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக உள்ளார்.  கடந்த ஏப்.25 ஆம் தேதி தனது எக்ஸ் வலைதளத்தில், ஒரு  குறிப்பிட்ட மதத்தினரை குறிவைத்து மதக்கலவரம் ஏற்படுத் தும் வகையில் கருத்து பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், நல்லிபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த பிர வீன்ராஜை போலீசார் செவ்வாயன்று கைது செய்து, விசா ரணை மேற்கொண்டனர். அதன்பிறகு, நாமக்கல் நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்த னர். ‘சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பொது மக்கள் பதிவிடும்போது சாதி, மத உணர்வுகளை தூண்டி  சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட வேண்டாம்’ என மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ச.ராஜேஷ்கண்ணன் அறிவுறுத்தியுள் ளார்.

வீட்டு பணியாளர்கள் நலவாரிய சிறப்பு முகாம் உதகை

, ஜூலை 2- வீட்டு பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வியாழனன்று (இன்று)  நடைபெறவுள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணை யாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லெனின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம் உரு வாக்கப்பட்டு 19 வகையான தொழிலாளர் நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் கட்டுமானம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 – 60 வயதிற் குட்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்து அரசின் பல்வேறு  நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் வீட்டு பணியாளர் நல வாரியத்தில் www.tnuwwb.in என்ற இணையதளம் மூலம்  விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்யலாம். இந்த வாரி யத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டவர்கள் 5 வரு டத்திற்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும்.  இந்த  நல வாரியத்தில் பதிவு செய்ய தொழிலாளர் உதவி ஆணை யர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் வியா ழனன்று (இன்று) காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி  வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. ஆதார் எண்ணு டன் இணைக்கப்பட்ட செல்போன் எண், அசல் ஆதார் அட்டை,  அசல் குடும்ப அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ, வங்கி  கணக்கு புத்தகம், வயதிற்கான ஆவணங்கள் கொண்டு வர  வேண்டும். இந்த வாய்ப்பை அனைத்து வீட்டு பணியாளர்க ளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

ரயில் கட்டண உயர்வு;

ஆர்ப்பாட்டம் ஈரோடு, ஜூலை 2- ரயில் கட்டண உயர்வை கண்டித்து, ஈரோட்டில் காங்கிரஸ்  கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீர் ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து, ஈரோடு மாநகர்  மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஈரோடு காளை மாட்டு சிலை அருகே உள்ள  சிம்னி ஹோட்டல் எதிரில் சங்கு ஊதும் போராட்டம், அக்கட்சி யின் மாவட்டத் தலைவர் டி.திருச்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இன்று மின்தடை

உடுமலை, ஜூலை 2- உடுமலைப்பேட்டை துணை மின் நிலையத்திற்குட்பட்ட மின்பாதைகளில் வியாழனன்று (இன்று) பராமரிப்புப் பணி கள் நடைபெறவுள்ளது. இதனால் உடுமலைப்பேட்டை நகரம்,  பழனிபாதை, தங்கமாள் ஓடை, இராகல்பாவி, சுண்டக்காம் பாளையம், சோமவாரம்பட்டி, பெதப்பம்பட்டி, ஏரிப்பாளை யம், புக்குளம், குறிச்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கர்நகர், காந்தி நகர் - 2, ஜீவா நகர், அரசு கலைக்கல்லூரி, போடிபட்டி,  பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை  உள்ளிட்ட பகுதிகளில் வியாழனன்று காலை 9 மணி முதல்  மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என  மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துவுள்ளார்.

பாஜகவின் சூழ்ச்சியை தோலுரிப்போம்: அமைச்சர் பேட்டி

சேலம், ஜூலை 2- தமிழகத்தில் பாசிச பாஜகவின் சூழ்ச்சியை ‘ஓரணியில் தமிழ்நாடு’ மூலம் தோலுரிப்போம், என சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் தெரிவித்தார். சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியிலுள்ள திமுக அலுவலகத்தில் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் செவ்வாயன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் ரா.ராஜேந்திரன் பேசுகையில், சேலம் மாவட்டத்தில் வரும் ஜூலை 3 ஆம் தேதி (இன்று) ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம் தொடங்கப்பட்டு, 45 நாட்களுக்கு கிராமம், நகரம் என மூலை முடுக்கெங்கும் இந்த முழக்கத்தை ஒலிக்கச் செய்வோம். பாஜக என்னும் பாசிச சக்தி, வன்மத்துடன் தமிழகத்தை பார்க்கிறது. பாஜகவின் கோரப்பிடியில் அதிமுக சிக்கியுள்ளது. கூட்டணி என்கிற பெயரில் பாஜகவுக்கு அதிமுக தமிழகத்தில் அடித்தளம் அமைத்து கொடுத்திருக்கிறது. இந்தி மொழி திணிப்பை பாஜக அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. கீழடியை அங்கீகரிக்க பாஜக அரசுமறுப்பதுடன், கூட்டாட்சி தத்துவத்தையும் புறந்தள்ளுகிறது. எனவே, பாசிச பாஜகவின் கோர முகத்தை ஓரணியில் தமிழ்நாடு மூலம் தோலுரிப்போம், என்றார்.