tamilnadu

img

ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் இயக்க தடை

ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் இயக்க தடை

தருமபுரி, ஆக.31- நீர்வரத்து அதிகரிப்பால் சுற்று லாப் பயணிகளின் நலன்கருதி, ஒகே னக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக் கவும், அருவியில் குளிக்கவும் தடை  விதிக்கப்பட்டது. கர்நாடகா மாநில காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங் களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ் ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி  அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது. பாதுகாப்பு கருதி இந்த  இரு அணைகளிலிருந்து தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தருமபுரி மாவட் டம், ஒகேனக்கல்லுக்கு சனியன்று 14  ஆயிரம் கன அடியாக நீர்வரத்து  இருந்தது. மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு  பகுதியில் தொடர்ந்து கனமழை  பெய்து வரும் நிலையில், ஞாயிறன்று  காலை 8 மணி நிலவரப்படி 24 ஆயி ரம் கனஅடியாக நீர்வரத்து அதி கரித்துள்ளதால் மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டு கிறது. நீர்வரத்து அதிகரிப்பால் பாது காப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கவும், படகு சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம்  தடை விதித்துள்ளது. விடுமுறை தின மான ஞாயிறன்று ஏராளமான சுற்று லாப் பயணிகள் ஒகேனக்கலில் குவிந் தனர். ஆனால், தடை விதிக்கப்பட்ட தால், ஏமாற்றமடைந்தனர். நீரில் மூழ்கி இளைஞர் பலி ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், ஸ்ரீனிவாசபுரம் பகுதி யைச் சேர்ந்தவர் ஜோதி கிருஷ்ணா காந்த் (30). பெங்களூருவிலுள்ள தனி யார் ஐடி நிறுவனத்தில் மேலாள ராக வேலை செய்து வந்தார். இந் நிலையில், ஞாயிறன்று தனது நண் பர்கள் 4 பேருடன் ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்துள்ளார். நண்பர்கள் 4  பேரும் தடையை மீறி சின்னாறு பரி சல் துறை அருகே உள்ள மணல் மேடு காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது ஜோதி கிருஷ்ணா காந்த்  மற்றும் அவரது நண்பர் ஆகிய இரு வருக்கும் நீச்சல் தெரியாததால் ஆழ மான பகுதிக்கு அடித்து செல்லப்பட்ட னர். இருவரும் சத்தம் போடவே அரு கிலிருந்த நண்பர் ஒருவரை மட் டும் காப்பாற்றியுள்ளார். ஜோதி கிருஷ்ணா காந்தை காப்பாற்ற முடிய வில்லை. நண்பர்கள் சத்தம் போடவே அருகிலிருந்தவர்கள் காப் பாற்ற முயன்றுள்ளனர். இதனி டையே, தகவலின்பேரில் ஒகேனக் கல் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து,  ஆற்றில் அடித்து செல்லப்பட்டவரை உயிரிழந்த நிலையில் மீட்டனர். இதன்பின் பிரேத பரிசோதனைக்காக  பென்னாகரம் அரசு மருத்துவம னைக்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது.