மின்சாரம் தாக்கி பனியன் தொழிலாளி பலி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
திருப்பூர், செப்.6- மின்சாரம் தாக்கி பலியான தொழி லாளியின் உடலை வாங்க மறுத்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் சனி யன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கோபிசெட்டிபாளையம் நாயக்கன் காடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (40). இவர் திருப்பூர் பெருமாநல்லூர் சாலை கணக்கம்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள மீரா கிரியேசன் பனி யன் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டா ளராக (க்யூ.சி) பணியாற்றி வந்தார். வெள்ளியன்று மாலை தொழிற்சாலை யில் ஆயில் இயந்திரத்தை சோதனை செய்யும்போது மின்சாரம் தாக்கியது. இதை தொடர்ந்து அவரை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். இந்நிலையில், சனியன்று உரிய இழப்பீடு வழங்கும் வரை உடலை வாங்க மறுத்து சீனிவாசனின் உறவி னர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். சீனிவாசனின் அண்ணன் கார்த்திகே யன் சனியன்று கூறுகையில், மின்சாரம் தாக்கியது குறித்து, கம்பெனி நிர்வாகம் எங்களுக்கு தகவல் தரவில்லை.உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது, உடனே கார் எடுத்துக்கொண்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு வரும்படி மட்டும் தான் கூறினர். என் தம்பிக்கு திருமண மாகி இரண்டு வருடங்கள் தான் ஆகி றது. உரிய இழப்பீடு தரும் வரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தார். உரிய இழப்பீடு வழங்க சிஐடியு வலி யுறுத்தல்: சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிஐடியு பனியன் சங்க பொதுச் செய லாளர் ஜி.சம்பத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு சென்று உறவினர்கள் உள் ளிட்டோரிடம் கேட்டறிந்தார். இதைய டுத்து ஜி.சம்பத் கூறுகையில், தொழிற் சாலையில் உபகரணங்களை முறை யாக பராமரிப்பு செய்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது. நிறுவனத் தின் கவனக்குறைவாலும், முன்னேற் பாடுகள் இல்லாததாலும், இப்படி ஒரு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தொழி லாளர் சட்டப்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். உடன் சிஐடியு நிர்வாகிகள் பி.பாலன், சிவ ராமன் உள்ளிட்டோர் அங்கிருந்தனர். இதைதொடர்ந்து மாலை பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை யடுத்து, உறவினர்கள் உடலை வாங்கிச் சென்றனர்.