ஒகேனக்கலில் பரிசல் இயக்க மீண்டும் தடைவிதிப்பு
தருமபுரி, செப்.5- ஒகேனக்கல் காவிரி ஆற்றின் அருவி களில் குளிப்பதற்கும், பரிசல் இயக்க வும் வெள்ளியன்று மீண்டும் தடை விதிக்கப்பட்டது. கர்நாடகா மற்றும் கேரளம் மாநிலங் களின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. இத னால் கர்நாடகத்தில் உள்ள கபினி மற் றும் கிருஷ்ணராஜ சாகர் அணைக ளுக்கு வரும் உபரிநீரின் அளவு அதி கரித்துள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிக ரித்து வருகிறது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவானது வியாழனன்று விநாடிக்கு 16,000 கனஅடியாக இருந்த நிலையில், வெள்ளியன்று காலை நில வரப்படி விநாடிக்கு 32 ஆயிரம் கன அடி யாக அதிகரித்தது. ஒகேனக்கலில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐவர் பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அருவிகளில் சுற்று லாப் பயணிகள் குளிப்பதற்கு 6 ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள் ளது. மேலும், காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வ தற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் வெள்ளியன்று முதல் தற்கா லிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். தடை உத்தரவின் காரணமாக பிரதான அருவி நுழைவு வாயில் மற்றும் சின் னாறு பரிசல் துறை மூடப்பட்டு காவல் துறை மற்றும் வருவாய்த்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்புதான், பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், பரிசல் ஓட்டி கள் வருவாயின்றி தவித்து வருகின்ற னர். மேலும், சுற்றுலாவை மட்டும் நம்பி யுள்ள அப்பகுதி கடை உரிமையா ளர்கள், மசாஜ் தொழிலாளர்கள் கவ லையடைந்துள்ளனர்.