tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

பிறந்த 2 நாட்களில் குழந்தை உயிரிழப்பு

திருப்பூர், செப்.16- திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 2 நாட்களில் குழந்தை இறந்த சோக சம்பவம் நிகழ்ந் துள்ளது. திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த அபிமன்யு (24) என்பவர் திருப்பூர் தனியார் நிறுவனத்தில் உதவி பொறி யாளராக பணியாற்றி வருகிறார். இவர் நாகஜோதிகா(23) என்பவரை காதல் திருமணம் செய்த நிலையில், ஞாயிற்றுக் கிழமை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், செவ்வாயன்று குழந் தைக்கு பால் கொடுத்து படுக்க வைத்த சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தை உயிரிழந்ததால் உரிய  மருத்துவம் செய்யப்படவில்லை  என கூறி, உறவினர்கள் மருத்துவமனையில் உள்ளே இருந்த கண்ணாடியை உடைத் துள்ளனர். இதையடுத்து திருப்பூர் தெற்கு காவல் துறையி னர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். மேலும் மருத்துவர்களிடம் குழந்தை உயிரிழப்புக்கான காரணம் குறித்தும் விசாரித்து மேற்கொணடனர்.

இன்று திருப்பூர் மாநகராட்சியில்  உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருப்பூர், செப்.16- உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூன்றாம் கட்டமாக  செப்.17 திருப்பூர் மாநகராட்சி, 4ஆம் மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.38,39,40 ஆகிய இடுவம்பாளையம் உயர்நி லைப்பள்ளி எதிரில் உள்ள அங்கம்மான் திருமண மண்ட பத்தில் நடைபெற உள்ளது. திருமுருகன்பூண்டி நகராட்சி, வார்டு எண்.6,7 ஆகிய பகுதிகளுக்கு திருமுருகன்பூண்டி சன்னதி வீதி மாணிக்கவாசகர் அரங்கத்திலும்,  தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் நஞ்சியம்பாளையம் ஊராட்சிக்கு குப்புச்சி பாளையம் அரசுபணியாளர் நகர் கிராம வறுமை ஒழிப்பு சங்க  கட்டடத்திலும், அவிநாசி ஊராட்சி ஒன்றியம் செம்பியநல்லூர்  ஊராட்சிகளுக்கு செம்பியநல்லூர் செந்தூர் மஹாலில் நடைபெற உள்ளது. மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் பாப் பான்குளம் ஊராட்சிக்கு முருகன்கோவில் மண்டபத்தில் நடை பெற உள்ளது.  எனவே, பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மனிஷ்  நாரணவரே கேட்டுக்கொண்டுள்ளார்.

நியாய விலை கடைப் பொருட்கள் கடத்தல்

திருப்பூர், செப்.16- காங்கேயத்தில் சட்டவிரோதமாக நியாயவிலை கடைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்தவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 954 கிலோ ர ேசன் அரிசி, 81 கிலோ பருப்பு, 4 லிட்டர் பாமாயில், 3 லிட்டர் மண்னெனய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் ரேசன் பொருட்களை பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி,  ரைஸ் மில்லுக்கு விற்பனை செய்வதாக காங்கேயம் போலீ சாருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. இதுகுறித்து காவல் துறை யினர் சோதனை செய்துள்ளனர். அப்போது பட்டியாண்டிபா ளையத்தை சேர்ந்த மகாலிங்கம் (48) என்பவர் காங்கேயம் டவுன், பாப்பினி, காடையூர், ஓலப்பாளையம் போன்ற இடங் களிள் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன்  அரிசி, பருப்பு, பாமாயில், மண்னெண்னை ஆகியவற்றை வாங்கி நீலக்காட்டுபுதூரில் உள்ள அரவை மில்லுக்கு  விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து  மகாலிங்கம், ரைஸ் மில் சூப்பர்வைசர் கதிர்வேல் ஆகியோர்  மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலிங்கம், கதிர்வேல்  ஆகியோரை சிறையில் அடைத்தனர்.  அவர்களிடம் இருந்து  954 கிலோ அரிசி, 81 கிலோ பருப்பு, 4 லிட்டர் பாமாயில்,  3 லிட்டர் மண்னெனய் ஆகியவற்றை பறிமுதல் செய்த னர்.

திருப்பூரில் நாளை மின்தடை

திருப்பூர், செப்.16- திருப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள்  நடைபெற இருப்பதால், செப்.18 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின்  விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடைபடும் பகுதிகள்: அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஒடக் காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, எஸ்டேன்ஸ் வீதி, ஹவு சிங் யூனிட், முத்துச்சாமி வீதி விரிவு, கே.ஆர்.இ. லேஅவுட்,  எஸ்.ஆர்.நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, பாத்திமா  நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம்.ஜி.ஆர்.நகர்,  பாரதிநகர், வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோ  நகர், காமாட்சிபுரம், பூத்தார் தியேட்டர் பகுதி, சாமுண்டிபுரம்,  லட்சுமி தியேட்டர் ஏரியா, கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி தியேட் டர் ஏரியா, ஆசர் நகர், நாராயணசாமி நகர், காந்தி நகர், டிடிபி  மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணா  காலனி, ஜீவா காலனி, அங்கேரிபாளையம் ரோடு மற்றும் சிங்காரவேலன் நகர். காட்டன் மில், சக்திதியேட்டர்ரோடு, பாப்பாநகர், பாரதிநகர்,கஞ்சம்பாளையம்,சின்னபொம்மநாய்க்கன்பாளையம், ராதாநகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் கல்விக்கடன் சிறப்பு முகாம் 42 மாணவர்களுக்கு ரூ.2.32 கோடி கடனுதவி

திருப்பூர், செப்.16- திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி சார் பில் கல்லூரி படிப்பிற்கான கல்விக் கடன் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், 42 மாண வர்களுக்கு ரூ.2.32 மதிப்பில் கல்வி கடனுக் கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே வழங்கினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங் கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன் னோடி வங்கி சார்பில் கல்லூரி மாணவர்கள்  பயன்பெறும் வகையில் கல்விக் கடன் சிறப்பு  முகாம் செவ்வாயன்று நடைபெற்றது.  இதில்  திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பல் வேறு பகுதிகளில் இருந்து கல்விக் கடன்  பெற முகாமில் பெற்றோர்களுடன் மாணவர் கள் பங்கேற்றனர். இந்த முகாமில் கனரா  வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி,  இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி  உள்ளிட்ட 22 வங்கிகள் கலந்து கொண்டது. 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் மாவட்ட ஆட்சி யர் 42 மாணவர்களுக்கு ரூ.2.32 கோடி  மதிப் பில் கல்விக் கடனுக்கான காசோலைகளை வழங்கினார். இதில், மாணவர்கள் கல்விக் கடன் பெற  தேவையான வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. வங்கி அலுவலர்கள் கல்விக் கடன் பெறும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்தும், துரிதமாக கடன் வழங்குவது குறித்தும், கல்விக் கடன் விண்ணப்பிக்கும் முறை பற்றியும் எடுத்துரைத்தனர். மேலும், இம்முகாமில் பெறப்பட்ட விண் ணப்பங்களை விரைவாக பரீசிலித்து கடன்  வழங்குமாறு  துறை சார்ந்த அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துர்க பிரசாந்த், கல்வி கடன் மூத்த ஆலோசகர் வணங்காமுடி,  மாவட்ட  முன்னோடி வங்கி அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ்குமார், கடன் ஆலோசகர் (மாவட்ட தொழில் மையம்) முரளிதரன் மற்றும் துறை  சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.