tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ரயில்வே தண்டவாளத்தில் குழந்தை சடலம் மாந்திரீக சடங்கா திசை திருப்பும் செயலா 

கோவை, செப்.15- ரயில்வே தண்டவாளத்தில் சுமார் ஒன்றரை மாத ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்ப வம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் ரயில்வே  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை இருகூர் ராவத்தூர் தரைப்பாலம் அருகே ஞாயிறன்று, ரயில்வே தண்டவாளத்தில் குழந்தை ஒன்று  இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் ரயில்வே காவல் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு  பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, குழந்தையின் உடல் கண்டெடுக்கப் பட்ட இடத்தின் அருகே, பலியிடப்பட்ட கோழியின் உடல்  மற்றும் மசாலாப் பொடி கண்டறியப்பட்டது. இது, ஏதே னும் மாந்திரீக சடங்கு நடந்திருக்கலாமோ என்ற சந்தே கத்தை எழுப்பியுள்ளது. இருப்பினும், இந்த செயல் கள் கொலையை திசைதிருப்பும் நோக்கில் செய்யப் பட்டிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். ஆய்வகப் பரிசோதனையில், கண்டெடுக்கப்பட்ட பொடி  சாம்பார் பொடி என்பது தெரியவந்துள்ளது. சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு, விசா ரணைக்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள் ளன. மோப்ப நாயின் உதவியுடன் ரயில்வே தண்டவா ளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை  மேற்கொள்ளப்பட்டது. மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து  வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், குழந்தையின் வயிற் றின் மீது ரயில் ஏறியதால் உயிரிழப்பு ஏற்பட்டிருக் கலாம் என தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் முடிவுகள் வெளியான பிறகே, குழந்தையின் இறப்புக்கான உண்மையான கார ணம் தெரியவரும். இந்த சம்பவம் இருகூர் மற்றும்  அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை யும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பேருந்தை வழிமறித்த காட்டு யானைகள்

நீலகிரி, செப்.15- குன்னூர் அருகே உள்ள மஞ்சூர் கெத்தை சாலையில்  இரவு நேரத்தில் காட்டு யானைகள் அரசு பேருந்தை வழி மறித்ததால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள மஞ்சூர்  பகுதியில் இருந்து கோவைக்கு ஒரு அரசு பேருந்து  மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஞாயி றன்று இரவு கோவையில் இருந்து மஞ்சூர் நோக்கி வந்து  கொண்டிருந்த அரசு பேருந்தை கெத்தை அருகே காட்டு  யானைகள் வழிமறித்தது. இதில் ஆறு யானைகள் பேருந்துக்கு வழிவிட்டு ஒதுங்கி சென்றாலும் கடைசியில்  வந்த ஒற்றை யானை பேருந்தை வழிமறித்து நின்றது.  இதனால் பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகள் அச்சம டைந்தனர். பின்னர், சிறிது நேரத்திற்கு பிறகு அது வனப்பகுதிக்குள் சென்றதால் நிம்மதியடைந்தனர்.

வடிகால், வாட்டர் டேங்க், அமைக்க  நகர்மன்ற கூட்டத்தில் கோரிக்கை

நாமக்கல், செப்.  15- குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இதில், வடிகால் வசதி,  குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என மன்ற உறுப்பினர் கள் கோரிக்கை விடுத்தனர். குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் ரமேஷ் முன்னிலை வகித் தார். இக்கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் அனை வரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பி னர்கள் தங்கள் பகுதிகளில் சாக்கடை கால்வாய் அமைக்க  வேண்டும், சாலைகள் அமைக்க வேண்டும் மற்றும் பழு தடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், மூன்றாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் வேல் முருகன் , தனது வார்டு பகுதியில் உள்ள நகராட்சிப் பள்ளி யின் எதிரியிலே குப்பை கிடங்கு உள்ளது, அதில், பாம்புகள்  வருவதாகவும் குப்பை கிடங்கை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். உடனடி யாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென நகர மன்ற  தலைவர் விஜய்கண்ணன் தெரிவித்தார். பின்னர் விஜய் கண்ணன் பேசுகையில், குமாரபாளையம் நகராட்சிப் பகுதி யில் உள்ள 33 நகர மன்ற உறுப்பினர்களும் தங்கள் பகுதியில்  செய்ய வேண்டிய, கழிப்பிடம், சாக்கடை கால்வாய் மற்றும்  சாலை வசதிகள் உள்ளிட்ட நான்கு அடிப்படைத்  ேவைகளை  அடுத்த நகர் மன்ற கூட்டத்திற்குள் கோரிக்கை மனுவாக வழங்க வேண்டும் என்றார். நகராட்சி தலைவரின்  கோரிக்கைகளை அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டனர்.  நகராட்சி கூட்டத்தில் ஒன்பது தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன